முகப்பு /நாமக்கல் /

புதுசா கல்லூரியில் சேரப்போறீங்களா..? கண்டிப்பா இதை செய்ய மறந்துடாதீங்க..!

புதுசா கல்லூரியில் சேரப்போறீங்களா..? கண்டிப்பா இதை செய்ய மறந்துடாதீங்க..!

புதுசா கல்லூரியில் சேரப்போறீங்களா?

புதுசா கல்லூரியில் சேரப்போறீங்களா?

College Admission 2023-24 : 2023-24ம் கல்வியாண்டில் சேரும் மாணவர்கள் கவனத்தில் கொல்ல வேண்டிய விஷயங்கள்.

  • Last Updated :
  • Namakkal, India

நடப்பு 2023-24ம் கல்வியாண்டில் புதிதாக கல்லூரியில் சேர்பவர்கள் கட்டாயம் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கிய தகவல்கள் குறித்து நாமக்கல் கலெக்டர் அலுவலகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

முன்கூட்டியே திட்டமிடல்

இதுகுறித்து நாமக்கல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நடப்பு 2023-24ம் கல்வியாண்டில் கலை, அறிவியல், பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டக் கல்லூரிகளில் தங்கள் குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம்கொண்டுள்ளவர்கள் உள்ளவர்கள், கடைசி நேர அலைச்சலை தவிர்ப்பதற்காக கீழ்க்கண்ட ஏற்பாடுகளை முன்கூட்டியே செய்து வைத்துக்கொண்டால் உங்களுக்கும், உங்கள் குழந்தைகைளுக்கும் மிகவும் உதவியாக இருக்கும். இதன் மூலம் அலைச்சலும் நேரமும் மிச்சமாகும்.

மாணவர்களுக்கு  முக்கிய அறிவுரை

2023ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற +2 பொதுத் தேர்வு முடிவுகள் நாளை (8ம் தேதி) வெளியாகும் என கல்வித்துறை அறிவித்துள்ளது. எனவே பிளஸ் தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் இப்போதே மாணவர்களின் பாஸ்போர்ட் சைஸ் கலர் போட்டோ 20ம், ஸ்டாம்ப் சைஸ் போட்டோ 10ம் முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளவேண்டும். மேலும் அவற்றை டிஜிட்டல் வடிவிலும் வாங்கி வைத்துக் கொள்ளவேண்டும்.

இதையும் படிங்க : நாளை துவங்குகிறது.. நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் விடுமுறை கால பயிற்சி முகாம்..

மாணவர்கள் பெயரில் ஏதேனும் ஓர் தேசிய மயமாக்கபட்ட வங்கியில் ஆன்லைன் வங்கி சேவை வசதியுடன் கூடிய சேமிப்பு கணக்கு ஒன்று துவக்கி வைத்துகொள்ள வேண்டும். வங்கி கணக்கு துவங்க பான் கார்டு அவசியம், இதுவரை பான் கார்ட் இல்லாதவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பான் கார்டு பெற்றுக்கொள்ள வேண்டும்.

புதுசா கல்லூரியில் சேரப்போறீங்களா?

சான்றிதழ்கள் முக்கியம்

பிறப்பு சான்றிதழ் ஒரிஜினல் இல்லாதவர்கள் சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலகம் /நகராட்சி/ மாநகராட்சி ஏதேனும் ஒன்றில் விண்ணப்பித்து புதிய பிறப்பு சான்றிதழ் வாங்கி வைத்து கொள்வது நல்லது. சாதி சான்றிதழ் இல்லாதவர்களும் / ஒரிஜினல் தங்கள் கைவசம் இல்லாதவர்ககளும் தற்போது புதியது ஒன்று வாங்கி வைத்து கொள்ளவும்.

இச்சான்று தற்போது கியூ ஆர் கோட் வசதியுடன் டிஜிட்டில் வடிவில் கிடைக்கிறது. இந்த சான்றிதழ் கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் பெற கண்டிப்பாக தேவை. மேலும் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கவும் இது தேவை. இந்த சான்றிதழ் நீங்கள் தமிழ்நாட்டை சேர்ந்தவர்தான் என்பதை உறுதிப்படுத்தி, பொறியியல்/ மருத்துவ கல்லூரியில் அரசு இடஒதுக்கீட்டில் இடம் பெற தேவை.

முதல் தலைமுறை பட்டதாரி கவனத்திற்கு

முதல் தலைமுறை பட்டதாரி (ஃபர்ஸ்ட் ஜெனரேசன் கிராஜூவேசன் சர்டிபிகேட்) சான்றிதழை, தகுதியானவர்கள் வாங்கி வைத்துக்கொள்ளவும். முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு கல்லூரி கட்டணத்தில் சிறப்பு சலுகை வழங்கப்படுகிறது.

வருமான சான்றிதழ், தேவையுள்ளவர்கள் வாங்கி வைத்துக்கொளவும். இது பள்ளி, கல்லூரிகளில் கல்வி உதவித்தொகைக்கு மற்றும் வருவாய்வழி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க தேவை. முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ், வருமான சான்றிதழ், சாதி சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ் தேவையுள்ள மாணவர்கள் இப்பொழுதே இ- சேவை மையங்கள் மூலம் விண்ணப்பித்து சம்மந்தப்பட்ட அலுவலர்களை தொடர்புகொண்டு வாங்கி வைத்து கொள்ளவும்.

நீட் தேர்வு மற்றும் மருத்துவ படிப்பு சேர்க்கைக்கு (எம்பிபிஎஸ்/ பிடிஎஸ்) விண்ணப்பிக்க விரும்புவர்கள், போட்டோ மற்றும் கைரேகைகளை டிஜிட்டல் வடிவில் ஸ்கேன் செய்து வைத்திருக்கவேண்டும். மேலும் பெற்றோர்களின் சாதி சான்றிதழும் தேவை.

பெற்றோர்களுக்கான அறிவுரை 

மாணவர்களின் பெயர்கள் இதுவரை ரேஷன் கார்டு எனும் குடும்ப அட்டையில் சேர்க்காமல் இருந்தால் உடடியாக சேர்த்துக் கொள்வது நல்லது. மாணவர்களின் பள்ளி டி.சி., மார்க் ஷீட்டுகள் உள்ளிட்ட எல்லா சான்றிதழ்களையும் கலர் ஜெராக்ஸ் எடுத்து வீட்டிலும் மற்றும் கம்ப்யூட்டர்களில் காணும் வடிவில் ஃபைலாக சேமித்து வைத்துகொள்ளவும். குறைந்தது எல்லாவற்றிலும் 15 காப்பிகள் தேவை.

+2 தேர்வு முடிவுகள் வரும் முன்பாக தங்கள் பிள்ளைகளை எந்த கல்லூரியில்/ எந்த பாடப்பிரிவில் சேர்ப்பது என மாணவர்களும் பெற்றோர்களும் பேசி தீர்மானம் செய்து வைத்து கொள்வது நல்லது. மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, முகவரி, பெற்றோர்களின் பெயர்கள் எல்லா சான்றிதழ்களிலும், குடும்ப அட்டை, ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம் போன்ற ஆவணங்களிலும், எழுத்துப்பிழை இன்றி சரியாக, ஒரே மாதிரியாக உள்ளதா என்று சரிபார்க்க வேண்டும். தேவை எனில் இப்போதே பிழை திருத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்.

புதுசா கல்லூரியில் சேரப்போறீங்களா?

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

ஆன்லைனை கவனிக்கவும்

கலை/அறிவியல்/பொறியியல் /சட்டக் கல்லூரி படிப்புகளுக்கு சேருவதற்கு ஆன்லைன் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். அதற்கு ஏதுவாக சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை தயார் படுத்தி வைத்து கொள்ள வேண்டும். கல்லூரி சேர்க்கை சம்மந்தமாக அவ்வப்போது வெளியாகும் தகவல்களை நாளிதழ், டிவி மற்றும் தொடர்புடைய இணையதளம் மூலம் கூர்ந்து கவனித்து வரவும். கல்லூரியில் சேர்க்கை பெறும் வரை மாணவர்களும் பெற்றோர்களும் விழிப்புடன் இருந்தால் விருப்பமான படிப்புகளை தேர்வு செய்து பயன் பெறலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Education, Local News, Namakkal