முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது...

நாமக்கல் மாவட்டத்தில் நாளை இங்கெல்லாம் மின்சாரம் இருக்காது...

மின் தடை

மின் தடை

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (வியாழக் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (16-02-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர்கள் நாகராஜன் மற்றும் சபாநாயகம் ஆகியோர் தெரிவித்துள்ளார்.

மின் தடை பகுதிகள்:

நாமக்கல் மாவட்டம் எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் மின்சார பராமரிப்பு பணிகள் காரணமாக எருமப்பட்டி, வரகூர், பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், தோட்டமுடையாம்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், முட்டான்செட்டி, வரதராஜபுரம், சிங்களம்கோம்பை, காவக்காரப்பட்டி, பவித்திரம்புதூர், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இதேபோல் காளப்பநாயக்கன்பட்டி துணைமின் நிலையத்திற்கு உட்பட்ட பேளுக்குறிச்சி, திருமலைப்பட்டி, காளப்பநாயக்கன்பட்டி, கொல்லிமலை, காரவள்ளி, ராமநாதபுரம்புதூர், பள்ளம்பாறை, உத்திரகிடிகாவல் மற்றும் துத்திக்குளம் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.

Must Read : வடிவேலு நடித்த ‘கைப்புள்ள வீடு’ எங்கிருக்கிறது தெரியுமா? - அடடே.. முன்னணி நடிகர்களின் இத்தனை படங்கள் இங்குதான் எடுக்கப்பட்டதா!

மேலும், மெட்டாலா துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பிலிப்பாகுட்டை, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜாபாளையம், உடையார்பாளையம், கார் கூடல்பட்டி, மெட்டாலா, உரம்பு, ஆயில்பட்டி, காட்டூர், காமராஜ் நகர், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை, பெரப்பன்சோலை, பெரியகுறிச்சி, மூலக்குறிச்சி, ஊனாந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூர் கோம்பை மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மின்சார விநியோகம் நிறுத்தப்படும் என்று ராசிபுரம் மின் கோட்ட செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளனர்.

First published:

Tags: Local News, Namakkal, Power cut, Power Shutdown