முகப்பு /நாமக்கல் /

கொளுத்தும் வெயில்... நாமக்கல்லில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கிய விஜய் ரசிகர்கள்!

கொளுத்தும் வெயில்... நாமக்கல்லில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கிய விஜய் ரசிகர்கள்!

X
நீர்மோர்

நீர்மோர் வழங்கிய விஜய் ரசிகர்கள்

Namakkal news | கோடை கால தாகத்தை போக்க நாமக்கல்லில் விஜய் மக்கள் இயக்கத்தினர், பொதுமக்களுக்கு நீர்மோர், வெள்ளரி, தர்பூசணி வழங்கினர்.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலமாக கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இந்த நிலையில் வெயிலில் நடமாடும் பொது மக்களின் தாகத்தை போக்கும் வகையில் நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தினர் கடந்த மார்ச் மாதம் முதல் நாமக்கல் நகரின் பல்வேறு பகுதிகளில் இலவசமாக நீர் மோர், எலுமிச்சை ஜூஸ், வெள்ளரி, தர்பூசணி, குளிர் பானங்களை ஆகியவை வழங்கி வருகின்றனர். அதன்படி நாமக்கல் உழவர் சந்தை அருகே விஜய் மக்கள் இயக்கத்தின் மேற்கு மாவட்ட தலைவர் சதீஷ் தலைமையில் பொதுமக்களுக்கு இலவசமாக நீர் போர் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. ஒரு மாத காலமாக இந்த சேவையை விஜய் மக்கள் இயக்கத்தினர் செய்து வந்தனர். இவர்களின் இந்த சேவை மக்கள் பாராட்டி வருகின்றனர்

இதே போல் நாமக்கல் நகரம் முழுவதும் உள்ள மக்கள் அதிகளவில் கூடும் இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் குறையும் வரை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் பொதுமக்களுக்கு நீர்மோர் உள்ளிட்டவை தொடர்ந்து தினமும் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

First published:

Tags: Local News, Namakkal, Vijay fans