ஹோம் /நாமக்கல் /

அரசுப் பேருந்து நிற்பதில்லை- திருச்செங்கோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்

அரசுப் பேருந்து நிற்பதில்லை- திருச்செங்கோட்டில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவ, மாணவிகள்

மாணவர்கள் போராட்டம்

மாணவர்கள் போராட்டம்

திருச்செங்கோட்டில் அரசுப் பேருந்து நிற்காமல் செல்வதாக அரசுப் பள்ளி மாணவ, மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :

  நாமக்கல் மாவட்டத்தில் அரசு பேருந்து குறித்த நேரத்திற்கு வரவில்லை என்றும் அரசு பள்ளி மாணவ, மாணவிகளை பேருந்தில் ஏற்றி செல்வதில்லை என்று கண்டித்து அரசு பள்ளி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

  நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் இருந்து வெப்படை செல்லும் வழியில் கீழேரிப்பட்டி என்ற ஊர் உள்ளது. இவ்வூரில் உள்ள பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் திருச்செங்கோடு அரசினர் ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு தினமும் பேருந்தில் சென்று வருகின்றனர். இதற்காக கீழேரிப்பட்டியிலிருந்து மாணவர்களுக்கென சிறப்பு பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

  போராட்டத்தில் மாணவிகள்

  இந்த நிலையில் சிறப்பு பேருந்து குறித்த நேரத்திற்கு வராததால் பள்ளிக்கு செல்ல மாணவர்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அந்த வழியில் செல்லும் 8-ம் எண் மற்றும் E5 எண் கொண்ட அரசு பேருந்துகள் இயங்கி வருகிறது. இதில் மாணவ, மாணவிகள் ஏற முயன்றுள்ளனர். ஆனால் பேருந்தில் ஏற்றாமல் நடத்துநர் தரக் குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது.

  சாலையில் காத்திருக்கும் மாணவிகள்

  இதனால் கோபமுற்ற மாணவ, மாணவிகள் குறித்த நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியவில்லை என்றும், வழக்கமாக பள்ளிக்கு செல்லும் நேரத்தில் விடப்படும் சிறப்பு பேருந்து சில நேரங்களில் காலதாமதமாகவும் வருகிறது.

  சாலையில் காத்திருக்கும் மாணவிகள்

  மேலும் இவ்வழியாக செல்லும் மற்ற அரசுப் பேருந்தில் ஏறும் போது நடத்துனர்கள், வேலைக்கு செல்பவர்களுக்கு தான் இடம், இலவசமாக வரும் உங்களுக்கு சிறப்பு பேருந்தில் செல்லுங்கள் என கூறி இறக்கி விடுகின்றனர். அது மட்டுமின்றி தரக்குறைவாகவும் பேசுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.

  மேலும் நாங்கள் உரிய நேரத்திற்கு பள்ளிக்கு செல்ல முடியாததால் ஆசிரியர்கள் திட்டுகிறார்கள். இங்குள்ள மாணவர்கள்

  பேருந்துகளை நம்பி பள்ளிக்கு செல்ல வேண்டி உள்ளதால் சரியான நேரத்தில் பேருந்துகளை இயக்க வேண்டும் கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

  மேலும் இது குறித்து தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் விரைந்து வந்து மாணவர்களை சமாதானப்படுத்திய பிறகு மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு சூழ்நிலை நிலவியது.

  செய்தியாளர்: மதன் - நாமக்கல்

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Namakkal