Home /namakkal /

நாமக்கல் முத்து மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா: வழுக்கு மரம் ஏறுதலில் இளைஞர்கள் ஆர்வம்

நாமக்கல் முத்து மாரியம்மன் கோவிலில் ஆடித் திருவிழா: வழுக்கு மரம் ஏறுதலில் இளைஞர்கள் ஆர்வம்

வழுக்கு மரம் ஏறுதல்

வழுக்கு மரம் ஏறுதல்

நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் காந்தி நகரில் எழுந்தருளி உள்ள முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. 

    நாமக்கல் மாவட்டம் வெப்படை பகுதியில் உள்ள காந்தி நகரில் எழுந்தருளி இருக்கும் முத்து மாரியம்மன் கோயில் திருவிழாவில் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது.

    வழுக்கு மரத்தின் உச்சியில் கட்டி வைத்திருந்த பரிசுத் தொகையை எடுப்பதற்கு சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை முந்தி அடித்துக் கொண்டு தங்களுடைய திறமைகளை வெளிக் காட்டினார்கள். மேலும் வெற்றி பெறுபவர்களுக்கு டிவியும், கலந்து கொண்டவர்களுக்கு ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட்டது.

    இக்கோயில் மிகவும் சக்தி வாய்ந்த ஒன்றாக இவ்வூர் மக்களால் கருதப்படுகிறது. கடந்த மாதம் இறுதியில் இக்கோயிலுக்கு பூச்சாட்டுதல் மற்றும் கம்பம் நடுதல் மூலம் விழா தொடங்கப்பட்டது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான தீர்த்தம் குடம் எடுத்தல், கரகாட்டம், வாண வேடிக்கை, சாமி வீதி உலா வருதல், பொங்கல் வைத்தல், மாவிளக்கு என பல நிகழ்ச்சிகள் சில தினங்களாக சிறப்பாக நடைபெற்றது.

    இந்த திருவிழாவில் ஊர் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் முதலாம் ஆண்டாக வழுக்கு மரம் ஏறும் போட்டி நடைபெற்றது. இதில் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள இளைஞர்கள் பலர் கலந்து கொண்டு போட்டி போட்டுக் கொண்டு வழுக்கு மரம் ஏறி மகிழ்ந்தனர்.

    வெற்றி பெற்றவர்களுக்கு மரத்தின் உச்சியில் இருந்து பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இக்கோயில் திருவிழா மட்டுமில்லாமல் ஊரில் உள்ளவர்களுக்கு இதுபோன்ற போட்டிகள் நடத்தும் போது புத்துணர்ச்சியாகவும் ஒரு விளையாட்டை ஊக்குவிக்கும் வகையிலும் இருக்கும் என்று தெரிவித்தனர்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி