முகப்பு /நாமக்கல் /

மாருதி 800 காரை BMW காராக மாற்றியமைத்து நாமக்கல்லில் கெத்தாக வலம் வரும் ஆட்டோ ராஜா..

மாருதி 800 காரை BMW காராக மாற்றியமைத்து நாமக்கல்லில் கெத்தாக வலம் வரும் ஆட்டோ ராஜா..

X
நாமக்கல்

நாமக்கல் நகருக்கு உட்பட திருவள்ளுவர் காலனியை சேர்ந்த ஆட்டோ ராஜா. இவர் நாடகங்கள்,

Namakkal | நாமக்கல்லில் தனது சொந்தக்காரை பிஎம்டபிள்யூ காராக மாற்றி நாமக்கல் நகரில் வலம் வரும் நாடக கலைஞர்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal | Namakkal

நாமக்கல்லில் தனது சொந்தக்காரை பிஎம்டபிள்யூ காராக மாற்றி நாமக்கல் நகரில் வலம் வரும் நாடக கலைஞரால் பொதுமக்கள் குழப்பத்தில் ஆழ்ந்தனர். நாமக்கல் நகருக்கு உட்பட திருவள்ளுவர் காலனியை சேர்ந்த ஆட்டோ ராஜா. இவர் நாடகங்கள், சின்னத்திரைகளிலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். இவர் தனது மாருதி 800 காரை தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு மினி பிஎம்டபிள்யூ கார் போல மாற்றியுள்ளார்.

இந்த காரில் முன்னணி சொகுசு கார்களில் உள்ள வசதியை தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு சிறப்பாக மாற்றி அமைத்துள்ளார். இந்த காரில் சன்ட்ரூப், பெரிய திரை மியூசிக் சிஸ்டம், ஸ்போர்ட்ஸ் ஸ்டேரிங், கியர், சீட் கவர், முன்பக்க பானேட் என அனைத்தையும் மாற்றியுள்ளார். இந்த காரை எடுத்து கொண்டு சாலைகளில் செல்லும் போது அனைவரது கண்களும் இந்த காரின் மீதே உள்ளது.

இதுகுறித்து ஆட்டோ ராஜா கூறுகையில், தனக்கு சிறு வயதிலிருந்து பிஎம்டபிள்யூ என்கிற சொகுசு காரை வாங்க வேண்டும் என்று ஆசை இருந்தது. இருப்பினும் அந்த காரை வாங்க முடியாததால் தன்னிடம் இருக்கும் வசதிக்கேற்ப தனது காரை பிஎம்டபிள்யூ ஆக மாற்றியதாகவும் சொகுசு கார்களில் உள்ள வசதிகள் போன்று தன்னுடைய மாருதி 800 காரில் உள்ளதாகவும்‌ 1 லிட்டர் பெட்ரோலுக்கு 20 கிமீ வரை மைலேட்ஜ் கிடைப்பதாகவும் தற்போது பிஎம்டபிள்யூ கார் அருகில் தனது காரை நிறுத்தினால் அந்த காரின் உரிமையாளர்கள் தன்னுடைய காரை கண்டு வியந்து வருவதாகவும் தெரிவித்தார்.

என்னதான் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ காரை வாங்க முடியவில்லை என்றாலும் ஆட்டோ ராஜா தன்னிடம் இருக்கும் மாருதி 800 காரை தனது விருப்பத்திற்கு ஏற்றவாறு மாற்றி அமைத்து நாமக்கலில் கெத்தாக வலம் வருகிறார் என்றே கூறலாம்.

First published:

Tags: BMW car, Car, Local News, Namakkal