ஹோம் /நாமக்கல் /

பரமத்தி வேலூர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

பரமத்தி வேலூர் சந்தையில் பூக்களின் விலை உயர்வு- விவசாயிகள் மகிழ்ச்சி

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

பரமத்தி வேலூர் சந்தையில் நடைபெற்ற ஏலத்தில் பூக்களின் அதிக விலைக்குச் சென்றது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் சந்தையில் கடந்த வாரத்தை காட்டிலும், இந்த வாரம் பூக்களின் விலை உயர்ந்து காணப்பட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

    பரமத்தி வேலூரில் ஏல சந்தைகளுக்கு விவசாயிகள் பூக்களைக் கொண்டு வருகின்றனா். இந்நிலையில் இந்த வாரம் நடந்த ஏலத்தில் பூக்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

    கடந்த வாரம் நடந்த ஏலத்தில் குண்டுமல்லிகை ரூ.300க்கும், சம்பங்கி கிலோ ரூ.150-க்கும், அரளி கிலோ ரூ.140க்கும், ரோஜா கிலோ ரூ.160க்கும், முல்லைப் பூ ரூ.250க்கும், செவ்வந்திப்பூ ரூ.150க்கும், கனகாம்பரம் ரூ.250க்கும் ஏலம் போனது.

    சனிக்கிழமை நடந்த ஏலத்தில் குண்டு மல்லிகை கிலோ ரூ.350க்கும், சம்பங்கி கிலோ ரூ.200க்கும், அரளி கிலோ ரூ.200க்கும், ரோஜா கிலோ ரூ.220க்கும், முல்லைப் பூ கிலோ ரூ.300க்கும், செவ்வந்திப்பூ ரூ.240க்கும், கனகாம்பரம் ரூ.350க்கும் ஏலம் போனது.

    வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்லை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனா்.

    பூக்கள் விலை உயா்வடைந்துள்ளதால் அவற்றைப் பயிா் செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal