முகப்பு /நாமக்கல் /

கருப்புசாமிக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட பிரமாண்ட அரிவாள்.. அடேங்கப்பா 1000 கிலோ எடையா?

கருப்புசாமிக்கு காணிக்கையாக வழங்கப்பட்ட பிரமாண்ட அரிவாள்.. அடேங்கப்பா 1000 கிலோ எடையா?

X
பிரமாண்ட

பிரமாண்ட அருவாள்

Namakkal big Aruval | ராசிபுரம் அருகே அமைந்துள்ள கருப்பணசாமி கோயிலுக்கு பக்தர்கள் அரிவாளை காணிக்கையாக வழங்குவது வழக்கம்.

  • Last Updated :
  • Rasipuram, India

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே பட்டணம் பள்ளத்து கருப்புசாமி கோவிலில் 1 டன் எடை, 21 அடி உயரம் கொண்ட பிரமாண்டமான 2 அரிவாள் பூஜைகள் செய்யப்பட்ட பிறகு கிரேன் உதவியுடன் நடப்பட்டது.

ராசிபுரம் அடுத்த பட்டணம் பஞ்சாயத்தில் பிரசித்தி பெற்ற பள்ளத்து கருப்புசாமி கோவில் உள்ளது. இங்கு 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை கிடா வெட்டி பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறும். இதில், சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர்,தர்மபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஒரே இரவில் மட்டும், ஆயிரக்கணக்கான ஆட்டு கிடாக்கள் வெட்டப்படுவது வழக்கம்.

தற்போது கொரோனா தொற்று காரணமாகக் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருவிழா நடைபெறாத நிலையில் நடப்பாண்டு வரும் 26ம் தேதி விழா நடைபெறுகிறது.

ALSO READ | "அதிக விளைச்சலுக்கு விதை பரிசோதனை அவசியம்.." - நாமக்கல் வேளாண் அலுவலர்கள் அறிவுறுத்தல்

இக்கோவிலுக்கு பட்டணம் பகுதியைச் சேர்ந்த வள்ளி மருத்துவமனை உரிமையாளர் இராஜா, மனைவி சாந்தி ஆகியோர் 1 டன் எடையும்,21 அடி உயர பிரமாண்ட இரும்பிலான அரிவாள் மற்றும் கை வடிவிலான 5 அடி கொண்ட கிரனைட் பீடம் என மொத்த 21 அடி கொண்ட 2 பிரமாண்ட அரிவாளை காணிக்கையாக வழங்கினர். இதனை கிரேன் உதவியுடன் கோவிலின் முன் பூஜைகள் செய்து நடப்பட்டது.

top videos

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    First published:

    Tags: Local News, Namakkal, Rasipuram