முகப்பு /நாமக்கல் /

நண்பர்களின் விடா முயற்சியால் உருவான பசுமை சாலை!

நண்பர்களின் விடா முயற்சியால் உருவான பசுமை சாலை!

X
நண்பர்களின்

நண்பர்களின் விடா முயற்சியால் உருவான பசுமை சாலை!

Namakkal : நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தண்ணீர் பந்தல் பாளையம் என்ற ஊரில் பசுமை நண்பர்கள் குழு என்ற அமைப்பினர் எங்கும் பசுமை என்ற‌ நோக்கில் சாலையோரத்தில் தொடர்ச்சியாக மரங்கள் நட்டு, தற்போது இது ஒரு பசுமை சாலை என்று சொல்லும் அளவிற்கு உருவாக்கி உள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal | Namakkal

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தண்ணீர் பந்தல் பாளையம் என்ற ஊரில் பசுமை நண்பர்கள் குழு என்ற அமைப்பினர் எங்கும் பசுமை என்ற‌ நோக்கில் சாலையோரத்தில் தொடர்ச்சியாக மரங்கள் நட்டு, தற்போது இது ஒரு பசுமை சாலை என்று சொல்லும் அளவிற்கு உருவாக்கி உள்ளனர்.

ஒவ்வொருவரும் வாழ்க்கையில் ஒரு செடி அல்லது மரத்தினை வைத்து முழுமையாக பராமரிக்க வேண்டும் என்று எண்ணம் இருக்கும்‌. ஆனால் அதை எவ்வளவு பேர் செய்கிறோம் என்பது கேள்விக்குறிதான்?. ஆனால் பசுமை நண்பர்கள் அமைப்பினர் ஒரு பசுமையான சூழலை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் மற்றும் நினைத்து‌ விடாமல் அதனை செயலில் செய்து காட்ட வேண்டும் என்று சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் அளவிற்கு 500க்கு மேற்பட்ட மரக்கன்றுகளை கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு வைத்துள்ளனர்.

மரக்கன்றுகள் வைத்தது மட்டுமின்றி அதனை முழுமையாக பராமரித்து அதற்கு தேவையான தண்ணீர், உரங்கள் என மரங்கள் வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கைகள் எடுத்து தற்போது பசுமை சாலை என்று சொல்லும் அளவிற்கு உருவாக்கி உள்ளனர்.

இதுகுறித்து பசுமை நண்பர்கள் அமைப்பினரிடம் பேசியபோது, “APJ அப்துல் கலாம் அவர்களின் நினைவாக, அவரின் நினைவுநாளில் ஏதாவது செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம். அப்போது ஒரு சில மரக்கன்றுகள் அவருடைய நினைவாக வைத்தோம். ஆனால் அதனை அப்படியே விட்டு விடக்கூடாது என்பதற்காக தொடர்ச்சியாக மரங்கள் நட ஆரம்பித்தோம்.

மேலும், முதலில் என்ன மரம் வைப்பது என்று தொியாமல் அயல் நாட்டு மரங்களை வைத்தோம். ஆனால் அதற்கு அதிகளவில் தண்ணீர் மற்றும் அதனை முறையாக பராமரிப்பு என பல சிக்கல் இருந்ததால் முழுமையாக மரத்தை காப்பாற்ற முடியவில்லை. இதனால், மூத்த ஆா்லவலா்களின் அறிவுரையின் போில் நம் மண் சாா்ந்த மரங்கள் வைக்க ஆரம்பித்தோம். அதன் பின் மண் அரிப்பு தடுக்கும் மரங்கள், பூ மற்றும் கனி வகைகள் சார்ந்த மரங்கள், மண்ணுக்கு ஏற்ற மரங்கள் என பல வகை மரங்களை வைத்துள்ளோம்.

மரம் வைத்து வளா்ப்பது எளிதான காாியம் இல்லை. மரம் வைத்து பிறகு கூண்டு கட்டி காப்பாற்றுதல், வெயில் காலங்களில் மூடாக்கு இட்டு நீா் உற்றுதல், இயன்றால் இயற்கை உரங்கள் என பல பராமரிப்பு முறைகளை கையாண்டு தற்போது ஒரு பசுமை சாலையே உருவாக்கி இருக்கிறோம் என்றே சொல்லலாம்.

எங்கள் குழுவில் ஒருங்கினைப்பாளா் மகராஜ், கோபி, சிவசங்கா், காா்த்தி,ஜோன், ஜெயபாரத், ஆலோசகா், பிரகாஷ், பிரபு இன்னும் பலரின் கூட்டு முயற்சியில் மட்டுமே இதன் பலன்களை கண்டுள்ளோம். இது மட்டுமின்றி இன்னும் பல நலத்திட்ட உதவிகள், பள்ளிக் குழந்தைகளுக்கு என பல உதவிகள் செய்துள்ளோம்.

இதுபோன்று ஒவ்வொரு கிராமத்திலும் உள்ளவர்கள் தாங்கள் இருக்கும் பகுதியிலே ஒரு மரக்கன்றாவது வைத்து அதனை முழுமையாக பராமரித்து காப்பற்ற வேண்டும். பின் வருங்காலத்தில் மரங்கள் நம்மை காப்பாற்றும் என்று தெரிவித்தனர்.

செய்தியாளர்: சே.மதன்குமார்-நாமக்கல்

First published:

Tags: Namakkal, Tree plant