ஹோம் /நாமக்கல் /

நாமக்கல்லில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு

நாமக்கல்லில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற உத்தரவு

நாமக்கல்

நாமக்கல்

Namakkal Latest News | நாமக்கல்லில் பணிபுரியும் வேறு மாநிலங்களைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வட மாநிலங்களை சேர்ந்த, புலம்பெயர்தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதன்படி நாமக்கல் மாவட்டத்திலும்ஏராளமானோர் பல்வேறு நிறுவனங்களில்வேலை செய்கின்றனர்.

இந்நிலையில், நாமக்கல்லில் பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் விவரங்களை இணையத்தில் பதிவேற்ற வேண்டும் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் தினகரன் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது :  நாமக்கல் மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரியும் மாநிலம் விட்டு மாநிலம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் தற்போதைய விவரங்களை https://labour.tn.gov.in/ism என்ற இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இதையும் படிங்க: கொல்லிமலை அருவியில் குளிக்க போறீங்களா..! - இதை கவனத்தில் கொள்ளுங்க..!

இந்த விவரத்தை அலுவலகத்தின் dcifsalem@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்ப வேண்டும். இதுவரை செய்யப்பட்ட பதிவேற்றங்களை ஆய்வு செய்ததில் சில தொழிற்சாலைகள் வெளி மாநில தொழிலாளர்களை பதிவேற்றாமல் இருப்பது குறித்து சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனருக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

எனவே, சம்பந்தப்பட்ட தொழிற்சாலை நிர்வாகத்தினர் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அதன் விவரத்தை சேலம் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார இணை இயக்குனர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்று தெரிக்கப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Namakkal