Home /namakkal /

Namakkal | குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட ஆட்சியர்

Namakkal | குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்ட ஆட்சியர்

வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடும் ஆட்சியர்

வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிடும் ஆட்சியர்

நாமக்கலில் வெள்ளம் பாதித்த பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் பார்வையிட்டார்.

    கர்நாடகாவில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கடந்த மூன்று நாட்களாக காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வந்து கொண்டிருக்கிறது. தற்போது வெள்ள நீர் ஆர்ப்பரித்துக் கொண்டு செல்வதால் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்து உள்ளது. இதனால் கரையோர மக்கள் தங்களது வீடுகளை விட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    தற்போது, மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு திறந்து விடப்படும் 2 லட்சம் கன அடி தண்ணீர் காவிரி ஆற்றில் பாலத்தை ஒட்டிக்கொண்டு ஆர்ப்பரித்து கொண்டு ஓடுகிறது. இதனால் குமாரபாளையம், பள்ளிபாளையம் பகுதிகளில் அதிக அளவில் வெள்ள நீர் புகுந்தது. இதில் குறிப்பாக குமாரபாளையத்தில் உள்ள கலைமகள் தெரு, மணிமேகலை வீதி, இந்திரா நகர், உள்ளிட்ட இடங்களில் காவிரி வெள்ள நீர் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் புகுந்துள்ளது.

    வெள்ளம் பாதித்த பகுதிகள்


    இதனையடுத்து வெள்ள நீர் புகுந்துள்ள வீடுகளில் இருந்து மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டு நகராட்சி பகுதியில் உள்ள மண்டபத்தில் முகாம் அமைக்கப்பட்டு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

    இந்த நிலையில், மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங் குமாரபாளையத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘ மேட்டூர் அணையில் 2 லட்சத்துக்கும் மேலான கன அடி நீர் திறந்து விடப்பட்டிருப்பதால் குமாரபாளையத்தில் கரையோர பகுதிகளில் உள்ள 80க்கும் மேற்பட்ட வீடுகளில் இதுவரை வெள்ள நீரானது புகுந்துள்ளது.

    வெள்ளம் பாதித்த பகுதிகள்


    மேலும் பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் முகாம்கள் அமைத்து தங்க வைக்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்களுக்கு தேவையான உதவிகள் மற்றும் உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.

    குமாரபாளையத்தில் காவிரி கரையோரம் உள்ள பட்டா நிலத்தில் குடியிருப்பவர்களுக்கு மாற்று இடம் வீடுகளுடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மீண்டும் அடுத்த ஆண்டு இதுபோல் வெள்ளம் ஏற்படுவதற்குள் அவர்களுக்கான மாற்று இடம் வழங்க பணிகள் வேகமாக நடைபெற்று வருவதாகவும்
    மணிமேகலை தெரு பகுதியில் காவிரி நீர் வீடுகளுக்குள் போகாமல் இருக்க தடுப்பு சுவர் அமைக்க திட்ட மதிப்பீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி