Home /namakkal /

குறுக்கே வந்த முதியவர்: கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த பேருந்து- நாமக்கலில் பரபரப்பு

குறுக்கே வந்த முதியவர்: கட்டுப்பாட்டை இழந்து கடைக்குள் புகுந்த பேருந்து- நாமக்கலில் பரபரப்பு

பேருந்து விபத்து

பேருந்து விபத்து

நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது தனியார் பேருந்து மோதாமல் இருக்க திருப்பிய போது கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கடைக்குள் புகுந்தது.

    நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்திலிருந்து சங்கரி வழியாக தினந்தோறும் ஏராளமான கனரக வாகனங்கள் முதல் பேருந்துகள் வரை செல்கின்றன. இந்நிலையில் ஈரோடு பேருந்து நிலையத்திலிருந்து ஓமலூர் நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று பள்ளிபாளையம் வழியாக சென்று கொண்டிருந்தது. அந்தப் பேருந்து ஈகாட்டூர் என்ற ஊர் வழியாக வந்து கொண்டிருந்த போது முதியவர் ஒருவர் பேருந்து வருவதை கவனிக்காமல் சாலையை கடக்க சென்றுள்ளார்.

    இதனையறிந்த பேருந்து ஓட்டுனர் முதியவர் மீது மோதாமல் இருக்க வேகமாக திருப்பி உள்ளார். வேகமாக வந்து பேருந்து தீடீரென திரும்பியதால் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த இறைச்சி கடைக்குள் புகுந்தது.

    கடையில் மோதிய பேருந்து


    இந்த விபத்தில் கடை மற்றும் பேருந்து முன்பக்கம் முழுவதும் சேதமடைந்து. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்தவர்கள் சிறிய காயங்களுடன் உயிர் தப்பினர்.

    மேலும் சாலையோரம் நின்று கொண்டிருந்த அப்பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் மீது பேருந்து மோதியது. இதில் காயம் அடைந்த அப்பெண்ணை உடனடியாக அப்பகுதி மக்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    அதி வேகமாக பேருந்து மோதியதால் கடையில் இருந்த பொருட்கள் மற்றும் கடையின் முன் பக்கம் பெரும் அளவில் சேதமடைந்துள்ளது.
    இதனால் சேதமடைந்த கடைக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் பேருந்தினை சிறைப்பிடித்தனர். இதனையறிந்த வெப்படை காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று மக்களை சம்மதானப்படுத்தி பேருந்தினை அங்கு இருந்த அகற்றினர். இச்சம்பவத்தால் அங்கு சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி