முகப்பு /நாமக்கல் /

கூட்டுறவு சங்கங்களில் தவணை கட்ட தவறியவர்களுக்கு சேலம் மண்டல அதிகாரி முக்கிய அறிவிப்பு!

கூட்டுறவு சங்கங்களில் தவணை கட்ட தவறியவர்களுக்கு சேலம் மண்டல அதிகாரி முக்கிய அறிவிப்பு!

மாதிரி படம்

மாதிரி படம்

Namakkal News | கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில் கடன் பெற்று தவணை தவறிய வாடிக்கையாளர்களுக்கான இ.எம்.ஐ. வட்டி மற்றும் அபராத வட்டியினை தமிழக அரசு தள்ளுபடி செய்துள்ளது.

  • Last Updated :
  • Namakkal, India

அனைத்து வகை கூட்டுறவு வீட்டு வீட்டுவசதி சங்கங்களில் கடன் பெற்று, தவணை கடந்தும், கடனை செலுத்தாத உறுப்பினர்களுக்கு, தவணை தவறிய தொகைக்கான இ.எம்.ஐ. வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி சலுகை காலம் நீட்டிப்பு செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் மண்டல கூட்டுறவு வீட்டு வசதி துணைப்பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, சேலம், நாமக்கல் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் உள்ள அனைத்து கூட்டுறவு வீட்டு வசதி சங்கங்களில், கடன் பெற்று தவணை தவறிய கடன்தாரர்களுக்கு, தமிழக அரசு அறிவித்துள்ள ஒரு முறை கடன் தீர்வு திட்டத்தின் கீழ், கடன்தாரர்கள் செலுத்த வேண்டிய அசல் மற்றும் வட்டியை ஒரே முறையில் செலுத்தும் பட்சத்தில் அவர்கள் செலுத்த வேண்டிய தவணை தவறிய வட்டி மற்றும் அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும்.

இச்சலுகை காலம் 3.3.2023-ல் இருந்து 6 மாதங்களுக்கு மட்டுமே அமலில் இருக்கும். அதன்பிறகு இத்திட்டம் செயல்பாட்டில் இருக்காது. இதற்கான உத்தரவை தமிழக அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, அரசாணை (நிலை) எண்.31, நாள்: 3.3.2023-இல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தவணை தவறிய அனைத்து வீட்டு வசதி சங்க உறுப்பினர்கள் அனைவரும், இச்சலுகையை பயன்படுத்தி அசல் மற்றும் வட்டியினை ஒரே முறையில் செலுத்தி பயனடைய வேண்டும்.

இதையும் படிங்க : கானா பாடல்கள் பாடி கோவை குணாவின் நண்பர்கள் இறுதி அஞ்சலி... 

மேலும் இச்சலுகை தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு, சம்பந்தப்பட்ட கூட்டுறவு வீட்டுவசதி சங்கங்களை நேரில் அணுகி தெரிந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Local News, Namakkal