முகப்பு /நாமக்கல் /

எம்.கே தியாகராஜ பாகவதரின் 113வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய நாமக்கல் பாகவதர் நற்பணி மன்றத்தினர்...

எம்.கே தியாகராஜ பாகவதரின் 113வது பிறந்தநாள் விழாவை கொண்டாடிய நாமக்கல் பாகவதர் நற்பணி மன்றத்தினர்...

தியாகராஜ பாகவதர் பிறந்த நாள்

தியாகராஜ பாகவதர் பிறந்த நாள்

Namakkal News | நாமக்கல் அண்ணா சிலை அருகில் எம். கே. தியாகராஜ பாகவதரின் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து, மலர்தூவி ரசிகர்கள் மரியாதை செலுத்தினர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மணிக்கூண்டு அருகில் எம்.கே தியாகராஜ பாகவதர் நற்பணி சங்கம் சார்பில் பாகவதரின் 113வது பிறந்தநாள் விழா நடைபெற்றது.

திருச்சியில் அதிமுக ஆட்சியில் தமிழக அரசு சார்பில் மறைந்ததமிழ் திரைபட நடிகர் எம் கே தியாகராஜ பாகவதர்க்கு மணி மண்டபம் கட்டப்பட்டு அது இன்னும் திறந்து வைக்கப்படாமல் இருக்கிறது. அதை விரைவில் திறந்து தங்களைப் போன்ற நற்பணி மன்றம் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நாமக்கல் எம். கே. தியாகராஜ பாகவதர் நற்பணி சங்கத்தின் தலைவர் கோட்டை. கோ.மணிவண்ணன் வேண்டுகோள் வைத்தார்.

நாமக்கல் அண்ணா சிலை அருகில் பழம்பெரும் தமிழ் திரையுலக முடிசூடா மன்னன் என்று அழைக்கப்பட்ட எம்.கே தியாகராஜ பாகவதர் 113 வது பிறந்த தின விழா கொண்டாடப்பட்டது. நாமக்கல் எம்.கே தியாகராஜ பாகவதர் நற்பணி சங்கம் சார்பில், நாமக்கல் அண்ணா சிலை அருகில் எம். கே. தியாகராஜ பாகவதரின் திரு உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு எம். கே. தியாகராஜ பாகவதர் நற்பணி சங்கத்தின் தலைவர் கோட்டை. கோ.மணிவண்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், எம். கே. தியாகராஜபாகவதரின் திரு உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர்தூவி மரியாதை செலுத்தி வணங்கி அனைவருக்கும் இனிப்பு வழங்கினர்

இதில் நாமக்கல் எம். கே. தியாகராஜபாகவதர் நற்பணி சங்கத்தின் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, துணைத் தலைவர் குமுதம் நாகராஜன், பொருளாளர் தியாகராஜன், வழக்கறிஞர் மனோகரன்,நகராட்சி கவுன்சிலர் விஸ்வநாதன், சரவணன், மாதேஸ்வரன், திருமூர்த்தி, புதுப்பட்டி நடராஜன், நரசிம்மன், துரைராஜன், டீலிங் மாது, பெரியசாமி, மருதமுத்து, முத்துகாபட்டி லோகநாதன், சபரி, பூபதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நாமக்கல் எம். கே. தியாகராஜ பாகவதர் நற்பணி சங்கத்தின் தலைவர் கோட்டை. கோ.மணிவண்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  திருச்சியில் அதிமுக ஆட்சியில் தமிழக அரசு சார்பில் மறைந்த தமிழ் திரைபட  நடிகர் எம் .கே.தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்டப்பட்டு அது இன்னும் திறந்து வைக்கப்படாமல் இருக்கிறது.

அதை விரைவில் திறந்து தங்களைப் போன்ற நற்பணி மன்றம் மற்றும் பொதுமக்களுக்கு பயனுள்ளதாக உருவாக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு .க.ஸ்டாலினுக்கு நாமக்கல் எம். கே. தியாகராஜ பாகவதர்  நற்பணி சங்கத்தின் சார்பில் வேண்டுகோள் வைப்பதாக கூறினார்.

First published:

Tags: Local News, Namakkal