முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் தொடங்கிய டி 20 கிரிக்கெட் போட்டிகள்

நாமக்கல்லில் தொடங்கிய டி 20 கிரிக்கெட் போட்டிகள்

X
நாமக்கல்லில்

நாமக்கல்லில் தொடங்கிய டி 20 கிரிக்கெட் போட்டிகள்

T20 Cricket Match in Namakkal | 20 ஓவர்கள் கொண்ட டி 20 லீக் போட்டிகள் நாமக்கல் மாவட்டத்தில் தொடங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து 24 அணிகள் இந்த போட்டியில் கலந்துக்கொண்டுள்ளன.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் எட்டிமடையில் உள்ள விளையாட்டு மைதானத்தில் டி 20 லீக் போட்டிகள் தொடங்கியது.‌ 20 ஓவர்கள் கொண்ட போட்டிகள் லீக் முறையில் பத்து நாட்கள் நடைபெறுகிறது. இந்த போட்டிகளில் திருநெல்வேலி, ஈரோடு, நாமக்கல், சேலம், பழனி, திருச்செங்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 24 அணிகள் கலந்துகொண்டு விளையாடுகின்றன.

நாமக்கல்லில் தொடங்கிய டி 20 கிரிக்கெட் போட்டிகள்

வெற்றி பெறும் அணிகளுக்கு முதல் பரிசாக 44 ஆயிரத்து 444 ரூபாயும் 2ம் பரிசாக 33 ஆயிரத்து 333 ரூபாயும் 3ம் பரிசாக 22 222 ரூபாயும் 4ம் பரிசாக 11,111 ரூபாயும் வெற்றிக் கோப்பைகளும் பரிசாக வழங்கப்படும் என போட்டி ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர். மேலும் ஆட்டநாயகன் விருது, சிறந்த பேட்ஸ்மேன், சிறந்த பவுலர் விருதுகள் ஆகியவை வழங்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

top videos
    First published:

    Tags: Cricket, Local News, Namakkal