Home /namakkal /

திருச்செங்கோட்டில் ஆடி அமாவசைக்கு அதிக அளவில் மக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல்

திருச்செங்கோட்டில் ஆடி அமாவசைக்கு அதிக அளவில் மக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல்

நாமக்கல் போக்குவரத்து நெரிசல்

நாமக்கல் போக்குவரத்து நெரிசல்

ஆடி அமாவாசை முன்னிட்டு அதிக அளவில் மக்கள் கோயில்களுக்கு படையெடுத்ததால் திருச்செங்கோடு பேருந்து நிலையம் செல்லும் சாலை மற்றும் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    ஆடி அமாவாசை முன்னிட்டு அதிக அளவில் மக்கள் கோயில்களுக்கு படையெடுத்ததால் திருச்செங்கோடு பேருந்து நிலையம் செல்லும் சாலை மற்றும் நகர பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    சிறப்பு வாய்ந்த ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்யவும், முன்னோர்களை வழிபடக்கூடிய ஒரு சிறந்த நாளாக கருதப்படுகிறது. வருடா வருடம் ஆடி அமாவாசை அன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். எல்லா மாதங்களிலும் அமாவாசை வந்தாலும் ஆடி மாதம் வரக்கூடிய ஆடி அமாவாசை சிறப்பு வாய்ந்தவையாக கருதப்படுவதால் இந்த நாளில் மறைந்த நம்முடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது விசேஷமானதாகும் என்று மக்கள் நீர்நிலைகளைத் தேடிச் செல்வார்கள்.

    நாமக்கல் போக்குவரத்து நெரிசல்


    அந்த வகையில், ஆடி அமாவாசை முன்னிட்டு ஏராளமான மக்கள் குலத்தெய்வ கோயில்களுக்கும், முன்னோர்களுக்கு தர்பணம் செய்யவும் படையெடுத்ததால் நாமக்கல், ராசிபுரம், குமாரபாளையம் நகரப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

    நாமக்கல் போக்குவரத்து நெரிசல்


    குறிப்பாக திருச்செங்கோடு சுற்று வட்டார பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் குலத் தெய்வ கோயில்களுக்கு செல்வதற்கும், நகரப் பகுதியில் அமைந்துள்ள புகழ்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோயில் மற்றும் மாரியம்மன் கோயில்களில் சாமி தரிசனம் செய்ய அதிக அளவில் இருசக்கர முதல் நான்கு சக்கர வாகனங்களில் நகரப் பகுதிக்குள் வருகை தந்தால் பேருந்து நிலையம் சாலை, பரமத்தி வேலூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் மக்கள் நீண்ட நேரம் காத்திருந்து மெதுவாக வாகனத்தை இயக்கும் சூழ்நிலை ஏற்பட்டது.

    திருச்செங்கோடு நகரத்தில் தினசரி காலை, மாலை நேரங்களில் மட்டுமின்றி இதுபோன்ற விசேஷ நாட்கள் மற்றும் திருமண முகூா்த்த தினங்களிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதுபோன்ற விசேஷ நாட்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் தடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி