Home /namakkal /

நாமக்கல்லில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி சூழல் - மக்கள் மகிழ்ச்சி

நாமக்கல்லில் திடீரென பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி சூழல் - மக்கள் மகிழ்ச்சி

நாமக்கல் - மழை

நாமக்கல் - மழை

Namakkal District : நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததுள்ளதால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சி சூழல் நிலவியது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். 

    நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ததுள்ளது. இதனால் வெப்பம் சற்று தணிந்து குளிர்ச்சி சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் கடும் கோடை வெப்பத்தால் மக்கள் வேதனையில் இருந்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையினால் அவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்..

    தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கோடை வெயில் வாட்டி வதைத்து வந்தது. மதிய நேரத்தில் மக்கள் வெளியே நடமாட முடியாத அளவிற்கு வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது. இதனால் பொதுமக்கள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் என பலர் அவதிப்பட்டு வந்தனர்.

    திடீர் மழை...


    தற்போது கோடை காலம் முடிந்து மழைக்காலம் தொடங்கி உள்ளதால் ஒரு சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால் நாமக்கல் மாவட்டம் பொறுத்தவரை பல்வேறு இடங்களில் சற்று வெயில் தாக்கம் அதிகமாகவே நிலவியது. இந்த நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடனும் காணப்பட்டது. இதனையடுத்து திருச்செங்கோடு, ராசிபுரம், பள்ளிபாளையம், குமாரபாளையம் என சுற்று வட்டார பகுதிகளில் சுமார் 1 மணிநேரத்திற்கு மேலாக மழை பெய்தது.

    திடீர் மழை...


    மாவட்டத்தில் சில நாட்களுக்கு முன்பு மழை இல்லாமல் வெயில் வெளுத்து வாங்கியது. இதனால் சுற்று வட்டார பகுதிகளில் வெப்பமாக இருந்தது. மேலும் ஒரு சில இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக வானம் மேக மூட்டத்துடன் மட்டுமே காணப்பட்டது.

    தற்போது திடீரென பெய்த மழையினால் வெப்பம் குறைந்து குளிர்ச்சி சூழல் உருவாகியுள்ளதால் மக்கள் சற்று மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Namakkal, Rain

    அடுத்த செய்தி