Home /namakkal /

 வாழைக்கு ஊடுபயிராக காய்கறிகள்: நாமக்கல்லில் ஹெக்டருக்கு ரூ.26,250 மானியம்

 வாழைக்கு ஊடுபயிராக காய்கறிகள்: நாமக்கல்லில் ஹெக்டருக்கு ரூ.26,250 மானியம்

மாதிரி படம்

மாதிரி படம்

நாமக்கல் மாவட்டம்  பரமத்தி வட்டார தோட்டக்கலைத் துறை சார்பாக காய்கறிகள், வாழை ஊடுபயிராக பயிரிட மானியம் வழங்கப்படுகிறது. பயிர் சாகுபடிக்கு மானியமாக ஹெக்டருக்கு ரூ.26,250, நடவுப்பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வட்டார தோட்டக்கலைத் துறை சார்பாக காய்கறிகள், வாழை ஊடுபயிராக பயிரிட மானியம் வழங்கப்படுகிறது. பயிர் சாகுபடிக்கு மானியமாக ஹெக்டருக்கு ரூ.26,250, நடவுப்பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது.

    தோட்டக்கலை இயக்க திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் காய்கறி பயிர்கள் செய்யும் பரப்பு விரிவாக்கம், நீர் ஆதாரத்தை பெருக்கிட விவசாய நிலங்களில் பண்ணை குட்டை அமைத்தல், சிப்பம் கட்டும் அறை கட்டுதல், குறைந்த விலையில் வெங்காயசேமிப்பு கிடங்கு அமைத்தல், பவர் டில்லர் இயந்திரங்கள் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    https://tnhorticulture.tn.gov. in/tnhortnet/login.php என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கும் விவசாயிகளுக்கு மட்டுமே மானிய திட்ட பயன்கள் வழங்கப்படும்.

    Also Read : ரூ.10 லட்சம் வங்கி கடன்; 50 % மானியம்- நாமக்கல் ஆட்சியரின் அசத்தல் அறிவிப்பு

    தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மானிய விலையில் நிரந்தர பந்தல் அமைத்தல், பண்ணைததிட்டம் உள்ளது.மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டத்தின் கீழ் காய்கறி தோட்டம் ஊக்குவித்தல், வாழை பயிர்களில் ஊடுபயிர் சாகுபடி, தோட்டக்கலை கருவிகள், உபகரணங்கள் வினியோகம் செய்யப்பட உள்ளது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பரமத்தி வட்டார தோட்டக் கலைத் துறை சார்பாக, வாழையில் ஊடுபயிராக காய்கறிகளை வளர்க்க மானியமாக ஹெக்டருக்கு ரூ.10 ஆயிரம் நடவுப்பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. அடுத்ததாக, தென்னையில் ஊடுபயிராக வாழை பயிர் செய்ய மானியமாக ஹெக்டருக்கு ரூ.26,250, நடவுப்பொருட்கள் மற்றும் இடுபொருட்கள் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் பயன் பெற பரமத்தி வட்டார தோட்டக்கலைத் துறை அலுவலரை அணுகுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
    Published by:Vijay R
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி