முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் அருகே சிலம்பக் கலைத்திருவிழா : பள்ளி மாணவர்கள் பங்கேற்று அசத்தல்!

நாமக்கல் அருகே சிலம்பக் கலைத்திருவிழா : பள்ளி மாணவர்கள் பங்கேற்று அசத்தல்!

X
சிலம்பம்

சிலம்பம் போட்டி

நாமக்கல்லில் மே தின விழாவை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் சிறப்பாக சிலம்பம் சுற்றிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் கோப்பையும் வழங்கப்பட்டது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல்லில் மே தின விழாவை முன்னிட்டு பள்ளி மாணவ, மாணவிகளின் கண்கவர் சிலம்பக் கலைத்திருவிழா நடைபெற்றது

நாமக்கல் மாவட்ட சிலம்ப ஆசான்கள், பயிற்சியாளர்கள் நல சங்கம் சார்பில் உழைப்பாளர் தினம் கொண்டாடப்பட்டது. இக் கொண்டாட்டத்தில் சிலம்ப பயிற்சி பள்ளிகளில் பயிற்சி பெறும் மாணவ மாணவியர்கள் 366 மாணவ, மாணவிகள் 24 குழுக்களாக பங்கேற்கும் மாவட்ட அளவிலான மாபெரும் மே தின விழா சிலம்பக் கலைத்திருவிழா மற்றும் மூத்த ஆசான்களுக்கு விருது வழங்கும் விழா நாமக்கல் சேந்தமங்கலம் சாலையில் உள்ள தனியார்பள்ளி மைதானத்தில் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்தசிலம்பக் கலைத் திருவிழாவில் நமது பாரம்பரிய சிலம்ப கலையின் குழு விளையாட்டுகளும், அலங்கார சிலம்பம் போர், சிலம்பம் புலி ஆட்டம், தீப்பந்தம், குத்து வரிசை விளையாட்டுகளும் இதில் நடைபெற்றது.

இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற மாணவ, மாணவிகள் குழுக்களாக சேர்ந்த சினிமா பாடலுக்கு ஏற்ப கண்கவர் சிலம்பாட்டத்தை நிகழ்த்தினர். இதில் சிறப்பாக சிலம்பம் சுற்றிய மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் கோப்பையும் வழங்கப்பட்டது.

First published:

Tags: Local News, Namakkal