முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.. அரசு மகளிர் கல்லூரியில் விரைவில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலை..

நாமக்கல் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை.. அரசு மகளிர் கல்லூரியில் விரைவில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலை..

அரசு மகளிர் கல்லூரியில் விரைவில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலை

அரசு மகளிர் கல்லூரியில் விரைவில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை சிலை

Namakkal News : நாமக்கல் நகரில் திருச்சி பிரதான சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி  வளாகத்தின் நுழைவு வாயில் அருகே நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் மார்பளவு சிலை நிறுவப்பட உள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் ராமலிங்கம் அரசு மகளிர் கலைக் கல்லூரி வளாகத்தில் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை மார்பளவு உருவ சிலை திறக்கப்பட உள்ளது.

“கத்தியின்றி, ரத்தமின்றி, யுத்தம் ஒன்று வருகுது” என்ற பாடல் வரி மூலம் விடுதலை வேட்கை ஊட்டியவர் நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை. அவரின் நினைவாக நாமக்கலில் உருவ சிலை நிறுவப்பட வேண்டும் என இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது

நாமக்கல் நகரில் திருச்சி பிரதான சாலையில் கவிஞர் ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி வளாகத்தின் நுழைவு வாயில் அருகே நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளையின் மார்பளவு சிலை நிறுவப்பட உள்ளது.

கவிஞரின் 180 கிலோ எடையுள்ள மார்பளவிலான வெங்கல சிலை தயார் நிலையில் உள்ளது. கல்லூரி நுழைவு வாயில் அருகே சிலை அமைக்கப்பட உள்ள பீடத்தினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி சிங், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமார், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் வரும் 3ம் தேதி கவிஞரின் சிலையை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

First published:

Tags: Local News, Namakkal