ஹோம் /நாமக்கல் /

மாநில அளவிலான தடகளப் போட்டி: நாமக்கல் மாவட்ட வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மாநில அளவிலான தடகளப் போட்டி: நாமக்கல் மாவட்ட வீரர்களுக்கு முக்கிய அறிவிப்பு

மாதிரி படம்

மாதிரி படம்

கிருஷ்ணகிரில் நடைபெறவுள்ள மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்க ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க நாமக்கல் மாவட்ட வீரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  கிருஷ்ணகிரியில் வரும் 17ம் தேதி முதல் 20 ம் தேதி வரை தடகளப் போட்டிகள் நடைபெறவுள்ள. இதில் பங்கேற்கும் நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் கட்டாயம் ஆன்லைன் வாயிலாக பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று நாமக்கல் மாவட்ட தடகள சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

  கிருஷ்ணகிரி மாவட்டத்தில், தடகளப் போட்டிகள் வரும் 17ம் தேதி முதல் நடக்கிறது. இதில் பங்கே ஆர்வமாக உள்ள வீரர்கள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

  தடகள போட்டிகளில் அண்மை காலமாக வீரர்கள் ஆர்வமாக பங்கேற்று வருகின்றனர். மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கும் வீரர்களுக்கும் தங்களது திறமைகளை நிரூப்பிக்கும் ஒரு வாய்ப்பாக கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் போட்டிகளை அறிவித்துள்ளது.

  தமிழ்நாடு மாநில தடகள சங்கம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட தடகள சங்கம் மூலமாக வரும் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை கிருஷ்ணகிரியில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான தடகள போட்டிகள் நடை பெறவுள்ளது.

  இந்த போட்டி 14, 16, 18, 20 என 4 வயது பிரிவுகளில் நடைபெறுகிறது. இதில் பங்கு பெற விருப்பம் உள்ள வீரர், வீரங்கனைகள் https://tnathleticassociation.com/என்ற இணையவழி மூலமாக பதிவு செய்து கொள்ளலாம்.

  மேலும், இந்த போட்டியில் வெற்றி பெறும் வீரர், வீரங்கனைகள் அடுத்த மாதம் ஆந்திரா மாநிலம் குண்டூரில் நடைபெறும் 33வது தென் மண்டல ஜூனியர் தடகள போட்டிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Namakkal