முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில் ஸ்ரீநரசிம்ம சுவாமி ஜெயந்தி பெருவிழா கோலாகலம்..!

நாமக்கல்லில் ஸ்ரீநரசிம்ம சுவாமி ஜெயந்தி பெருவிழா கோலாகலம்..!

X
நாமக்கல்லில்

நாமக்கல்லில் ஸ்ரீநரசிம்ம சுவாமி ஜெயந்தி பெருவிழா

Sri Narasimmar Swamy Jayanti in Namakkal : குடவரைக்கோயிலான நாமக்கல் ஸ்ரீநரசிம்ம பெருமாள் சுவாமி கோயிலில் ஸ்ரீநரசிம்ம சுவாமி ஜெயந்தி விழா நடைபெற்றது. 

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல்லில் ஒரே கல்லிலான மலையில் மேற்கு முகமாக அமைந்துள்ள குடவரை கோயிலிலான நாமக்கல் ஸ்ரீநரசிம்ம பெருமாள் சுவாமி கோயிலில் ஸ்ரீநரசிம்ம சுவாமி ஜெயந்தி விழா மற்றும் அன்னதானம் வழங்கும் விழா நடைபெற்றது.

இவ்விழாவில் அருள்வாக்கு சித்தர் 108 சக்தி பீடாதிபதி ஸ்ரீலஸ்ரீ காமாட்சி சுவாமிகள் பங்கேற்று சிறப்பித்தனர். பக்தர்களின் அழைப்புக்கு உடனே வரும் தெய்வமான ஸ்ரீநரசிம்ம பெருமாள் சுவாமியின் ஜெயந்தி பெருவிழா குருநாதர்கள் ஸ்ரீகாமாட்சி சுவாமிகள் மற்றும் ஸ்ரீரங்கம் ஸ்ரீலட்சுமி நாராயண சித்தர் வழிகாட்டுதல்கள் படி சிறப்பாக நடைபெற்றது.

நாமக்கல்லில் ஸ்ரீநரசிம்ம சுவாமி ஜெயந்தி பெருவிழா

இந்த விழாவில் பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமியின் அருளை பெற திரண்டு வந்திருந்தனர். இந்த ஸ்ரீநரசிம்ம ஜெயந்தி பெரும் விழாவில் கலந்துகொண்ட பக்தர்களுக்கு கிரக தோஷம் நீங்கி, திருமண தடை விலகி, குழந்தை பேறு கைகூட, வியாதிகள் நீங்க, எதிரிகள் தொல்லை விலக, உலக கண் திருஷ்டி அகல, கடன் பிரச்சனை தீர, மன தைரியம் கைகூட, வியாபார அபிவிருத்தி அடைய, சர்வ சகல செல்வங்கள் மற்றும் சௌபாக்கியம் அருளப்பட்ட ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோமம் நடைபெற்றது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இவ்விழாவிற்க்கான ஏற்பாடுகளை ஸ்ரீ பாலா தேவஸ்தானம், ஸ்ரீ லட்சுமி நரசிம்ம பக்த ஜனசபா, ஸ்ரீ மகா பெரியவா இல்லம், ஆகியோர்கள் ஏற்பாடு செய்தனர்.

    First published:

    Tags: Local News, Namakkal