ஹோம் /நாமக்கல் /

திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

திருச்செங்கோடு கைலாசநாதர் கோவிலில் பிரதோசத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு

நந்திக்கு சிறப்பு பூஜை

நந்திக்கு சிறப்பு பூஜை

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் சிவன் கோயில்களில் சிறப்பு பிரதோஷ வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tiruchengode, India

  சிவபெருமானை பிரதோஷ காலத்தில் ஆலயம் சென்று வணங்குவதால் சிறந்த பலனை அடைய முடியும். பிரதோஷ நாளான இன்று மாலை நேரத்தில் பிரதோஷ சிவனை வணங்கி வழிபட்டால் மற்ற நாட்களில் ஏற்படும் துன்பங்கள் நீங்கி இன்பம் பெறலாம் என்பது நம்பிக்கை கருதப்படுகிறது.

  இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருக்கும் சிவன் கோயில்களில் சிறப்பு பிரதோஷ வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது.

  இதில் குறிப்பாக திருச்செங்கோடு நகரில் உள்ள சிறப்பு வாய்ந்த கைலாசநாதர் கோயில் சன்னதிக்கு முன்பு உள்ள நந்திக்கு மஞ்சள், திரவியம், மாப்பொடி, பச்சரிசி, இளநீர், தேன், பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. அதன் பின் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு நந்திக்கு வில்வ இலை மற்றும் அருகம்புல் மாலை அணிவிக்கப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

  இதேபோல் ராசிபுரம் அருகே உள்ள குருசாமிபாளையத்தில் அமைந்துள்ள சிவன் கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்திக்கு சிறப்பு வழிபாடுகள் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. இதில் ஊர் மக்கள் பலரும் கலந்துகொண்டு கடவுளின் அருளை பெற்றனர்.

  மேலும் பரமத்தி வேலூர் அருகே உள்ள பரமேஸ்வரர் ஆலயம், குமாரபாளையம் அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வேஸ்வரர் ஆலயம், கோட்டைமேடு கைலாசநாதர் கோயில் உட்பட பல்வேறு சிவன் ஆலயங்களில் சிறப்பு பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.

  இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

  செய்தியாளர் : மதன் - நாமக்கல்

  Published by:Karthick S
  First published:

  Tags: Local News, Namakkal