Home /namakkal /

Namakkal | ரேசன் கார்டில் பிரச்னையா? தீர்வு காண சிறப்பு குறைதீர் முகாம்!

Namakkal | ரேசன் கார்டில் பிரச்னையா? தீர்வு காண சிறப்பு குறைதீர் முகாம்!

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், சேர்த்தல், மொபைல் எண்கள் தொடர்பான சிறப்பு குறைதீர் முகாம் நாளை நடைபெறுகிறது.

    நாமக்கல் மாவட்டத்தில் ரேஷன் கார்டில் பெயர் மாற்றம், சேர்த்தல், மொபைல் எண்கள் தொடர்பான சிறப்பு குறைதீர் முகாம் நாளை நடைபெறுகிறது.

    தமிழ்நாடு முழுவதும் தற்போது பழைய குடும்ப அட்டைக்கு பதிலாக ஸ்மார்ட் ரேஷன் கார்டு கொண்டுவரப்பட்டு பயன்படுத்தி வருகின்றனர். இதில் ஐந்து வகையான அட்டைகள் குடும்பங்களின் வருமானத்தை பொறுத்து வழங்கப்படுகிறது. குடும்ப அட்டை அதில் இருக்கும் குறியீடுகளை வைத்து அட்டையின் வகையை அறிந்துகொள்ள முடியும். அதற்கு ஏற்றவாறு ரேசன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. மேலும் இந்த குடும்ப அட்டை மூலம் மக்கள் அவர்களுக்கு தேவைப்படும் பல அத்தியாவசிய பொருட்களை ரேஷன் கடைகள் மூலம் குறைந்த விலையில் வாங்கி வருகின்றனர்.

    தற்போது, இந்த ரேஷன் கார்டில் ஏதாவது பிரச்சினைகள் மற்றும் திருத்தம் செய்ய நாமக்கல் மாவட்டத்தில் நாளை சிறப்பு குறைதீர் முகாம் நடக்கிறது.

    இந்த முகாமில் ரேஷன் கார்டுகளில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம், மொபைல் எண் பதிவு, புதிய ஸ்மார்ட் கார்டு மற்றும் ரேஷன் கடைகளின் செயல்பாடுகள் குறித்து புகார் அளிக்க பொது வினியோக திட்ட மக்கள் குறைதீர் நாள் முகாம், நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, நாமக்கல், ராசிபுரம், மோகனூர், சேந்தமங்கலம், கொல்லிமலை, திருச்செங்கோடு, பரமத்தி வேலுார் மற்றும் குமாரபாளையம் வட்ட வழங்கல் அலுவலகங்களில் நடைபெற உள்ளது.

    ஆகையால், பொதுமக்கள் சிறப்பு குறைதீர் முகாமில் பங்கேற்று தங்களது ரேசன் கார்டில் உள்ள பொதுவினியோக திட்டம் தொடர்பான குறைகளை தெரிவித்த தீர்வு காணலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    செய்தியாளர்: மதன், நாமக்கல்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி