Home /namakkal /

அனைத்து வேளாண் துறைகள் பங்கேற்ற சிறப்பு முகாம்!

அனைத்து வேளாண் துறைகள் பங்கேற்ற சிறப்பு முகாம்!

நாமக்கல்

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் அனைத்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை பங்கேற்ற சிறப்பு முகாம் நடைபெற்றது.

    நாமக்கல் மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள பல்வேறு ஊராட்சிகளில் அனைத்து வேளாண் மற்றும் உழவர் நலத்துறை பங்கேற்ற சிறப்பு முகாம் நடைபெற்றது.

    இதில் நாமக்கல், சேந்தமங்கலம், மோகனூர்,கொல்லிமலை, ராசிபுரம், வெண்ணந்தூர், திருச்செங்கோடு, பள்ளிபாளையம், மல்லசமுத்திரம் பரமத்தி வேலூர் ஆகிய பகுதிகளில் உள்ள ஊராட்சி மன்றங்களில் நடைபெற்ற சிறப்பு முகாமில் பயிர்க்கடன் வழங்குதல், விவசாயிகளுக்கு கடன் அட்டை வழங்குதல், பயிர் காப்பீடு குறித்து விளக்கப்பட்டது. மேலும் கால்நடைகள் சிறப்பு முகாம் நடத்துதல் மற்றும் அந்தந்த துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் பற்றியும் எடுத்துரைக்கப்பட்டது.

    இம்முகாமில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை என பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்று அரசின் திட்டங்கள் குறித்து விவசாயிகளுக்கு எடுத்துரைத்தனர்.

    இதன் ஒரு பகுதியாக தேவனாங்குறிச்சி ஊராட்சி மன்றத்தில் நடைபெற்ற சிறப்பு முகாமில் வேளாண் துறையில் விவசாயிகளுக்கான பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதை குறித்து அதிகாரிகள் எடுத்துரைக்கப்பட்டது.

    மேலும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின்கீழ் உள்ள பல்வேறு திட்டங்கள் குறித்தும், ஒவ்வொரு துறையின்‌ செயல்பாடுகள் மற்றும் அதில் வழங்கப்படும் மானியங்கள், சலுகைகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டது. மேலும் விவசாயிகள் தங்கள் நிலங்களில் எந்த மாதிரியான பயிர் சாகுபடி செய்யலாம், எவ்வளவு லாபம் ஈட்ட முடியும், சாகுபடி செய்யும் பயிர்களை எவ்வாறு விற்கலாம் என விவசாயிகளின் சந்தேகங்களுக்கும் விளக்கம் அளித்தனர்.

    செய்தியாளர்:சே.மதன்குமார்-நாமக்கல்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Namakkal

    அடுத்த செய்தி