முகப்பு /நாமக்கல் /

தைப்பூச திருவிழா : நாமக்கல்லில் இருந்து பழனிக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

தைப்பூச திருவிழா : நாமக்கல்லில் இருந்து பழனிக்கு நாளை முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்..

மாதிரி படம்

மாதிரி படம்

Namakkal to Palani Bus Service | தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சேலம் மற்றும் நாமக்கல்லில் இருந்து பழனிக்கு சிறப்பு பேருந்துகள் நாளை(சனிக்கிழமை) முதல் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் அறிவித்துள்ளது. 

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சேலம் மற்றும் நாமக்கல்லில் இருந்து பழனிக்கு சிறப்பு பேருந்துகள் நாளை முதல் (சனிக்கிழமை) இயக்கப்படவுள்ளது.

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு சேலம் மற்றும் நாமக்கல்லில் இருந்து பழனிக்கு சிறப்பு பேருந்துகள் நாளை (சனிக்கிழமை) முதல் இயக்கப்படும் என தமிழ்நாடு போக்குவரத்து கழக சேலம் கோட்டம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக சேலம் கோட்ட நிர்வாக இயக்குனர் பொன்முடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பவுர்ணமி மற்றும் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு நாளை (சனிக்கிழமை) முதல் சேலத்தில் இருந்து ஈரோடு, காங்கேயம் வழியாக பழனிக்கும், நாமக்கல்லில் இருந்து கரூர் வழியாக பழனிக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோல் சேலம், ராசிபுரம், திருச்செங்கோடு, சங்ககிரி, எடப்பாடி ஆகிய ஊர்களில் இருந்து காளிப்பட்டிக்கும், எடப்பாடியில் இருந்து பழனிக்கும், நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய ஊர்களில் இருந்து கபிலர்மலைக்கும் பஸ்கள் இயக்கப்படுகின்றன.

மேலும் சேலத்தில் இருந்து வடலூருக்கும், திருவண்ணாமலைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த சிறப்பு பேருந்துகள் வருகிற 6-ந் தேதி வரை இயக்கப்படும்" இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Namakkal