Home /namakkal /

நாமக்கலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் பயிற்சி முகாம்

நாமக்கலில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் பயிற்சி முகாம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கலில் இளைஞர்களுக்கு வரும் 27-ம் தேதி வேலைவாய்ப்பு மற்றும் சுயதொழில் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள படித்து முடித்த, படித்து வேலை வாய்ப்பு இல்லாத இளைஞர்களை முன்னேற்றும் வகையில், மத்திய, மாநில அரசுகள் சார்பில், வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில் பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது.

    இதில், இளைஞர்களை சுய தொழில் முனைவோர்களாகவும், பயிற்சி வழங்கி தனியார் துறையில் வேலை வாய்ப்பை பெற்று தருவதே அரசின் முக்கிய நோக்கமாகும்.

    இந்நிலையில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய கிராமீன் கௌசல் யோஜனா திட்டத்தின் கீழ் புதுச்சத்திரம் வட்டாரத்தை சோ்ந்த 18 முதல் 45 வயது
    வரையிலான ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு அரசு துறைகளின் கீழ் வேலைவாய்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம், பிரதமரின் கௌசல் விகாஸ் யோஜனா, மாவட்ட தொழில் மையம் மற்றும் ஆதி திராவிடா் குடியிருப்பு மேம்பாட்டு கழகம் உள்ளிட்டவை சாா்பில் தையல், அலங்கார ஆடை வடிவமைப்பு, அழகுக் கலை, ஓட்டுநா், உதவி செவிலியா், நான்கு சக்கர வாகனம் பழுது நீக்குதல், கணினி, சில்லறை விற்பனை வணிகம், துரித உணவு தயாரித்தல், கை பேசி பழுது நீக்குதல் போன்ற இலவச திறன் பயிற்சிகளை வழங்கி தனியாா் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு மற்றும் சுய தொழில்
    செய்வதற்கு ஏதுவாக பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன.

    இந்தப் பயிற்சிக்காக இளைஞா்களைத் தோ்வு செய்யும் வகையில் வரும் 27ம் தேதி இளைஞா் திறன் திருவிழா காலை 9 முதல் மாலை 5 வரை ஏ.கே.சமுத்திரத்தில் உள்ள ஞானமணி பொறியியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் புதுச்சத்திரம் வட்டாரத்தை சோ்ந்த ஆண், பெண் இருபாலரும் கலந்து கொண்டு பொருத்தமான பயிற்சியைத் தோ்வு செய்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தெரிவித்துள்ளார்.
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி