சர்வதேச துப்பாக்கி சுடும்போட்டியில் நாமக்கல் மற்றும் அதை சுற்றியுள்ள மாணவ, மாணவிகள் கலந்து கொள்ளவேண்டும் என்ற நோக்கத்துடன் நாமக்கல் சூட்டிங் அகாடமி என்ற தனியார் பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
மூன் விண் ஸ்போர்ட்ஸ் ஹவுஸ் சார்பில் நாமக்கல் சூட்டிங் அகாடமி (என்.எஸ் .ஏ.) பயிற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது. இதன் துவக்க விழா மிகவும் விமரிசையாக நடைபெற்றது. மூன் விண் ஸ்போர்ட்ஸ் ஹவுஸ் தலைவர் எஸ்.சுரேஷ்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் நாமக்கல் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ் குத்து விளக்கு ஏற்றி வைத்துஅகாடமி திறந்து வைத்தார்.
கொங்கு நகர் பழனியாண்டி வீதியில் அமைந்துள்ள இந்த நாமக்கல் சூட்டிங் அகாடமி துவக்க விழாவில் தமிழ்நாடு சூட்டிங் அசோசியேஷன் செயலாளர் எஸ்.வி.எஸ் (எ) எஸ்.வேல்சங்கர், தமிழ்நாடு சூட்டிங் அசோசியேஷன் துணைத் தலைவர் பி கிஷோர், ரோட்டரி டிஸ்ட்ரிக்ட் கவர்னர் பி.சரவணன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இந்த நாமக்கல் சூட்டிங் அகாடமியின் பயிற்சியாளராக முன்னாள் ராணுவ வீரர் கேப்டன் ஆர் பாண்டியன் பயிற்சி அளிக்க உள்ளார். மேலும் கேப்டன் ஆர்.பாண்டியன் முன்னாள் இந்தியன் ஷூட்டிங் டீம் கோச் (பயிற்சியாளராக) இருந்தவர். தற்போது கேரள அரசின் சூட்டிங் அகாடமியில் பயிற்சியாளராக இருந்து வருகிறார். இவர் இந்த நாமக்கல் சூட்டிங் அகாடமியின் பயிற்சியாளராக மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி அளிக்க இருக்கிறார்.
இதுகுறித்து கேப்டன் ஆர்.பாண்டியன் கூறுகையில்,”மத்திய பிரதேஷ், கேரள மாநிலம் உள்ளிட்ட மாநிலங்களில் துப்பாக்கி சுடும் போட்டிக்கு பயிற்சி கொடுப்பதற்காக அரசாங்கமே பயிற்சி மையங்களை அதாவது சூட்டிங் அகாடமியை ஆரம்பித்து நடத்தி வருகிறது. தமிழ்நாட்டிலும் தற்போதுள்ள விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவ்வாறாக பயிற்சி அளிப்பதற்கான முயற்சியை மேற்கொண்டு வருகிறார். எனவே, விரைவில் அரசின் பயிற்சி மையங்கள் தமிழகத்திலும் அமைக்கப்படும் என்ற நம்பிக்கை இருக்கிறது” என தெரிவித்தார்.
மேலும் இதுகுறித்து தமிழ்நாடு சூட்டிங் அசோசியேஷன், தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை தொடர்பு கொண்டு கோரிக்கை வைத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal