முகப்பு /நாமக்கல் /

சேந்தமங்கலத்தில் நடைபெறும் திட்ட பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்!

சேந்தமங்கலத்தில் நடைபெறும் திட்ட பணிகளை ஆய்வு செய்த அதிகாரிகள்!

அதிகாரிகள் ஆய்வு

அதிகாரிகள் ஆய்வு

Namakkal News | நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுக்காவில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal | Namakkal

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் தாலுக்கா காளப்பநாயக்கன்பட்டியில் தார் சாலை அமைக்கும் பணி, வாழவந்திகோம்பை பஞ்சாயத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளையும், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்ததின் நிர்வாக இயக்குநர் மகேஸ்வரன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, திட்டப்பணிகளை நிர்ணயிக்கப்பட்ட ஒப்பந்த காலத்திற்குள், விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.

சேந்தமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மகேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சேந்தமங்கலம் தாசில்தார் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு அங்கு பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளை பார்வையிட்டார். அப்போது, பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், ஆன்லைன் மூலம் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு, வழங்கப்பட்டுள்ள பல்வேறு சான்றிதழ்கள் குறித்த நேரத்தில் வழங்கப்பட்டுள்ளதா என்பதையும், கம்யூட்டரில் பார்வையிட்டு, விண்ணப்பம் பெறப்பட்ட நாள் மற்றும் சான்றிதழ் வழங்க தாசில்தாருக்கு வருவாய் ஆய்வாளர் பரிந்துரை செய்த நாள் குறித்த விபரங்களை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சரிபார்த்தார்.

முன்னதாக பேளுக்குறிச்சி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை நேரில் பார்வையிட்டு, அங்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை மற்றும் பெயர் விவரங்களையும், பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகளையும், இருப்பில் உள்ள மருந்துகளையும் அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், நாமக்கல் ஆர்டிஓ மஞ்சுளா, சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் பிரபாகரன் உள்ளிட்ட பல்வேறு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

First published:

Tags: Local News, Namakkal