முகப்பு /நாமக்கல் /

சாட்டையடி வாங்கிய பக்தர்கள்.. நாமக்கல் சீராப்பள்ளி மாரியம்மன் கோவிலில் வினோத நேர்த்திக்கடன்!

சாட்டையடி வாங்கிய பக்தர்கள்.. நாமக்கல் சீராப்பள்ளி மாரியம்மன் கோவிலில் வினோத நேர்த்திக்கடன்!

X
சாட்டையடி

சாட்டையடி வாங்கிய பக்தர்கள்

Namakkal News : ஒவ்வொருவராக வரும் பக்தர்கள் கையை உயர்த்தி நடனமாடிக்கொண்டே சாட்டையடி வாங்கி செல்கின்றனர். இந்த வினோத பழக்கம் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்படுகிறது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம் சீராப்பள்ளிமாரியம்மன் கோவில் பண்டிகை கடந்த வாரம் பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இரவு பூச்சட்டி எடுக்கும் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடந்தது. அதிகாலை பக்தர்கள் ஊர்வலமாக கோயிலை வலம் வந்து பின்னர் பூச்சட்டியில் இருந்த நெருப்பை கோவில் முன்பு கொட்டியவுடன், பக்தர்கள் அதை திருநீராக எடுத்து நெற்றியில் பூசிக்கொண்டனர்.

தொடர்ந்து சாட்டையடி நிகழ்ச்சி நடந்தது. அருள் வந்த பூசாரி பக்தர்களை சாட்டையால் அடித்து ஆசி வழங்கினார். பக்தர்கள் தங்களது பிரார்த்தனை நிறைவேறினாலும் அல்லது ஏதாவது ஒரு கோரிக்கையை மனதில் நினைத்துக்கொண்டும் பூசாரி முன்பு வந்து கையை தூக்கி வரிசையாக நிற்கின்றனர்.

சாட்டையடி வாங்கிய பக்தர்கள்

சாட்டையுடன் நிற்கும் பூசாரி அருள் வந்து பக்தர்களை அடிக்கிறார். ஒவ்வொருவராக வரும் பக்தர்கள் கையை உயர்த்தி நடனமாடிக்கொண்டே சாட்டையடி வாங்கி செல்கின்றனர். இந்த வினோத பழக்கம் பல ஆண்டுகளாக கடைபிடிக்கப்படுகிறது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

top videos

    இது குறித்து சீராப்பள்ளியை சேர்ந்த பக்தர்கள் கூறியதாவது, “தங்களது பிரார்த்தனை நிறைவேறினால் சாட்டையடி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மேலும், சட்டையடி வாங்கினால் தீமை விலகி, நன்மை நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளதால் குழந்தைகள், பெண்கள் பெரியவர்கள் என அனைவரும் வேண்டுதல் இல்லை என்றாலும் பூசாரி கையால் சாட்டையடி வாங்கி கொள்கின்றனர்”. இவ்வாறு பக்தர்கள் தெரிவித்தனர்.

    First published:

    Tags: Local News, Namakkal