முகப்பு /நாமக்கல் /

ஆபத்தான முறையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள்.. பதைபதைக்கும் காட்சிகள்!

ஆபத்தான முறையில் பேருந்து படிக்கட்டில் பயணம் செய்யும் மாணவர்கள்.. பதைபதைக்கும் காட்சிகள்!

X
ஆபத்தான

ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்

Namakkal News | ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் அரசு பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவிகள் பேருந்து பற்றாக்குறை காரணமாக படியில் தொங்கியபடி உயிரை பணயம் வைத்து பயணம் செல்லும் மாணவ மாணவிகள்.

  • Last Updated :
  • Namakkal, India

ராசிபுரம் அருகே அரசு பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் அரசு பள்ளி மாணவ மாணவிகளின் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில்1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்விபயின்று வருகின்றனர். பள்ளியை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் அரசு பேருந்து மற்றும் தனியார் பேருந்தின் மூலம் பள்ளிக்கு வந்து செல்கின்றனர்.

பள்ளி நேரங்களில்ஒரே ஒரு பேருந்து இயக்கப்படுவதால் அரசு பள்ளி மாணவ மாணவிகள் பேருந்தின் படிக்கட்டில் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

top videos

    ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்ளும் மாணவ மாணவிகளை தடுக்க பள்ளி நேரத்தின்போது கூடுதல் பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறையும் பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

    First published:

    Tags: Bus, Local News, Rasipuram, School students