நாமக்கல் மாவட்டம் கருவேப்பம்பட்டி அருகே உள்ள சீனிவாசன் பாளையம் பகுதியில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையில் படித்து வரும் மாணவர்கள் காமராஜர் பிறந்தநாளை முன்னிட்டு காமராஜர், அம்பேத்கர் போன்ற தலைவர்கள் வேடம் அணிந்து வந்து காமராஜர் உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தினர். அதன் பின் காமராஜர் செய்த நற்செயல்கள் குறித்து விளக்கி பேசினார்கள்.
அதனைத் தொடர்ந்து பள்ளித் தலைமை ஆசிரியர் சாந்தி, ஆசிரியர் சுகன்யா தலைமையில், Road To School திட்டத்திலிருந்து HLFL மற்றும் LLF நிறுவனத்தில் பணிபுரியும் கமலசத்யா, இளவரசி, நர்மதா ஆகியோர் உதவியுடன் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தடுக்க வேண்டும். ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களால் நிலப்பரப்பிலும், நீர் நிலைகளிலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறது.
இதனை தடுக்க வேண்டும் என்று பள்ளி மாணவர்களுடன் பிளாஸ்டிக்கை ஒழிப்போம், காகித பையைப் பயன்படுத்துவோம், பிளாஸ்டிக் பயன்பாடு முற்றிலும் ஒழிக்க வேண்டும், சுற்று சூழலுக்கு தீங்கு விளைவிக்காமல் காப்பாற்ற வேண்டும் என்ற கோஷங்களை எழுப்பியவாறு ஊர்வலமாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் மக்களுக்கு காகித பைகள், துணிப் பைகள் தரப்பட்டு அதனுடைய நன்மைகள் குறித்தும் விளக்கம் அளித்தார்கள்.
தொடர்ந்து, ஒவ்வொரு மாணவர்களும் தங்கள் வீடு மற்றும் வீடுகள் இருக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு அவ்வபோது பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் பிரச்சனைகளை எடுத்துரைப்பதன் மூலம் அதன் பயன்பாட்டில் இருந்து மக்களை வெளியே கொண்டு வருவதற்கான முயற்சியில் இறங்க முடியும்.
இதற்காக மாணவர்களே காகித பைகள் மற்றும் துணிப் பைகள் தயார் செய்து எடுத்து வந்து இந்த விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர். இதுபோன்ற ஒவ்வொரு பள்ளி மாணவர்கள் தாங்கள் இருக்கும் பகுதியில் உள்ள மக்களுக்கு மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் பற்றிய தகவல்களை தெரியப்படுத்த வேண்டும் என்று தலைமை ஆசிரியர் தெரிவித்தார்.
செய்தியாளர்: மதன் - நாமக்கல்
உங்கள் நகரத்திலிருந்து(நாமக்கல்)
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.