முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் திடீர் தர்ணா!

நாமக்கல் அரசு மருத்துவமனையில் தூய்மை பணியாளர்கள் திடீர் தர்ணா!

தூய்மை பணியாளர்கள் தர்ணா

தூய்மை பணியாளர்கள் தர்ணா

Namakkal News | நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மை பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் தூய்மை பணியாளர்கள், காவலர்கள், உதவியாளர்கள் என 100 க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இங்கு பணிபுரிந்து வரும் தூய்மை பணியாளக்களுக்கு ஒப்பந்தம் அடிப்படையில் அறிவிக்கப்பட்ட ஊதியம் முறையாக வழங்கப்பட வில்லை, தூய்மைப்பணியாளர்கள் வளர்மதி, நிர்மலா, பூங்கொடி , சுதா ஆகிய 4 பேரை பழிவாங்கும் வகையில் கிறிஸ்டல் நிறுவனம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், மீண்டும் அவர்களுக்கு பணி வழங்க வேண்டும் என்றும், தூய்மைப்பணியாளர்களின் ஊதியத்தை முறைக்கேடு செய்பவர்களை கண்டித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் அறை முன்பு சுமார் 30 க்கும் மேற்பட்டோர் தரையில் அமர்ந்து திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்

போராட்டம் நடத்திய தூய்மைப்பணியாளர்களிடம் நாமக்கல் காவல் ஆய்வாளர் சங்கரபாண்டியன் பேச்சுவார்த்தை நடத்தினார் இதில் உடன்பாடு ஏற்படாத நிலையில் கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மைப்பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவமனை கண்காணிப்பாளர் அறை முன்பு தூய்மை பணியாளர்கள் திடீர் தர்ணா போராட்டத்தால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

First published:

Tags: Local News, Namakkal, Protest