Home /namakkal /

Namakkal : பலாப்பழம் சீசன் தொடக்கம்.. நாமக்கல்லில் விற்பனை அமோகம்!

Namakkal : பலாப்பழம் சீசன் தொடக்கம்.. நாமக்கல்லில் விற்பனை அமோகம்!

நாமக்கல் - பலாப்பழ சீசன்

நாமக்கல் - பலாப்பழ சீசன்

Namakkal District : பலாப்பழம் விற்பனை சீசன் தொடங்கி உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலாப்பழம் விற்பனை தொடங்கி உள்ளதால் அதிக அளவில் மக்கள் வாங்கி செல்கின்றனர்.

    முக்கனிகளுள் ஒன்றான பலாப்பழமானது அனைவராலும் விரும்பி சாப்பிடக்கூடிய பழமாகும். அவ்வளவு இனிப்பான சுவையான பழமாக பலாப்பழம் திகழ்கிறது. பலாப்பழம் சுவையானது மட்டுமல்லாமல் அதில் உடலுக்கு பல விதமான நன்மைகள் ஏற்படுத்தும் சத்துக்கள் அடங்கியிருக்கின்றன. பழங்களிலே பலாப்பழத்துக்கு தனி சுவை உண்டு என்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பு இருக்கும். அதுவும் சீசன் நேரத்தில் மட்டுமே கிடைக்கும் பழம் என்பதால் அதிக அளவில் விற்பனையாகும்.

    தற்போது பலாப்பழம் விற்பனை சீசன் தொடங்கி உள்ளதால் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் பலாப்பழம் விற்பனை தொடங்கி உள்ளதால் அதிக அளவில் மக்கள் வாங்கி செல்கின்றனர். அதுமட்டுமின்றி கொல்லிமலை பலாப்பழம் என்றாலே தனிச் சுவையாக இருக்கும். இதனால் மலைவாழ் விவசாயிகள் அங்கு விளையக்கூடிய பலாப்பழங்களை அதிகளவில் சந்தைக்கு கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    பலாப்பழ விற்பனை..


    மேலும் கொல்லிமலை, கடலூர், பண்ருட்டி, கேரளாவில் போன்ற பல்வேற பகுதிகளிலிருந்து பலாப்பழங்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது.

    தற்போது ஒரு பலாப்பழம் ரூபாய் 150 முதல் ரூபாய் 300வரை விற்பனை செய்யப்படுகிறது. கிலோ ஒன்றுக்கு 20 ரூபாய் முதல் 30 ரூபாய் வரை விற்க்கப்படுவதால் நல்ல லாபமும் கிடைக்கிறது என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

    உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

    மக்கள் அதிகளவில் கூடும் இடங்களான, சந்தை, பஸ் நிறுத்தம் போன்ற பகுதிகளில் ஆட்டோ மூலமாகவோ அல்லது சிறிய கடைகள் போன்று வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது ஜூலை ஆகஸ்ட் மாதம் வரை சீசன் உள்ளதால் பலாப்பழ விற்பனை சூடு பிடித்துள்ளது என வியாபாரிகள் கூறுகின்றனர்.

    செய்தியாளர்: மதன் - நாமக்கல்
    Published by:Arun
    First published:

    Tags: Jack Fruit, Local News, Namakkal

    அடுத்த செய்தி