ஹோம் /நாமக்கல் /

நாமக்கல்: உணவகத்தில் மது அருந்த அனுமதி அளித்த தாபா உரிமையாளர் மற்றும் இருவர் கைது!

நாமக்கல்: உணவகத்தில் மது அருந்த அனுமதி அளித்த தாபா உரிமையாளர் மற்றும் இருவர் கைது!

X
ஹோட்டலுக்குள்

ஹோட்டலுக்குள் மது அருந்த அனுமதி

Namakkal Dhaba | நாமக்கல் அருகே உணவகத்தில் இளைஞர்களுக்கு மது அருந்த அனுமதி அளித்த தாபா உரிமையாளர் மற்றும் இருவரை போலீசார் கைது செய்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal | Namakkal

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பழைய தேசிய நெடுஞ்சாலையில் இயங்கி வரும் தாபா உணவகத்தில் அனுமதி இன்றி பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மற்றும் இளைஞர்களுக்கு தினமும் மது அருந்த அனுமதி அளிப்பதும், முன்னாள் மாணவர்கள் சந்திப்பு, பிறந்தநாள் விழா கொண்டாடுவதற்கும் அனுமதி அளித்து வருவதாக காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்தி வேலூர் காவல் ஆய்வாளர் இந்திராணி தலைமையிலான போலீசார் அங்கு சோதனை செய்தபோது அனைத்து குடில்களிலும் இளைஞர்கள் மது அருந்தி கொண்டிருந்தனர்

அவர்களைஅழைத்து போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். மேலும் கடை உரிமையாளரான சகோதரர்கள் செந்தில் மற்றும் சிவா ஆகிய இருவரையும் பரமத்திவேலூர் போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் காவல் ஆய்வாளர் இந்திராணி தெரிவித்த போது“இது போன்ற சட்ட விரோதமாக உணவகங்கள், தாபாக்களில் மது விற்பது மற்றும் மது அருந்துவதற்கு அனுமதி அளிப்படும் சட்ட விரோத செயலாகும் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்

First published:

Tags: Arrest, Local News, Namakkal