முகப்பு /நாமக்கல் /

கோலாகலமாக நடந்த ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோயில் தேர்த்திருவிழா 

கோலாகலமாக நடந்த ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோயில் தேர்த்திருவிழா 

X
பொன்

பொன் வரதராஜ பெருமாள் கோயில் தேரோட்டோம்

Namakkal : ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

  • Last Updated :
  • Namakkal, India

ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா. வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் எம்.பி ஆகியோர் பங்கேற்று  தேரை வடம்பிடித்து இழுத்து விழாவைக் தொடங்கி வைத்தனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் மேட்டு தெருவில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத பொன் வரதராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சித்திரை தேர்த்திருவிழா கடந்த ஏப்ரல் 24-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராசிபுரம் பொன் வரதராஜ பெருமாள் கோவில் தேர்த்திருவிழா

தினந்தோறும் ஒவ்வொரு கட்டளைதாரர் சார்பிலும் சாமி நகர்வலம் வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை ஸ்ரீதேவி பூதேவி சமேத வரதராஜ பெருமாள் அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். அப்போது சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. மாலையில் தேரடி நிலையத்திலிருந்து தேரோட்டம் தொடங்கியது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அப்போது சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஸ்குமார், ராசிபுரம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

top videos

    1000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தேரை இழுத்துச் சென்றனர். ராசிபுரம் பழைய பஸ் நிலையத்தில் உள்ள தேரடி நிலையத்திலிருந்து தொடங்கிய தேரோட்டம் கச்சேரி வீதி, சின்ன கடை வீதி, பெரிய கடை வீதி வழியாகச் சென்று பூக்கடை வீதியில் நிலைநிறுத்தப்பட்டது. மீண்டும் திருத்தேர் இழுக்கப்பட்டு தேரடி வந்துச் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

    First published:

    Tags: Local News, Namakkal