முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் வழியாக இயங்கும் ராமேஸ்வரம் - ஹூப்ளி விரைவு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு!

நாமக்கல் வழியாக இயங்கும் ராமேஸ்வரம் - ஹூப்ளி விரைவு ரயில் ஜூன் வரை நீட்டிப்பு!

ஹூப்ளி விரைவு ரயில்

ஹூப்ளி விரைவு ரயில்

Namakkal News : நாமக்கல் வழியாக இயங்கும் ராமேஸ்வரம் - ஹூப்ளி விரைவு ரயில் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல், சேலம், தருமபுரி வழியாக வாரந்தோறும் இரு மாா்க்கத்திலும் இயக்கப்பட்டு வரும் ராமேஸ்வரம் - ஹூப்ளி விரைவு ரயில் ஏப்ரல் முதல் ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், “ராமேஸ்வரம் - ஹூப்ளி இடையே இரு மாா்க்கத்திலும் வாராந்திர விரைவு ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயிலானது ஹாவேரி, ராணிபென்னூா், தாவணகெரே, சிக்ஜாஜூா், தும்கூா், யஸ்வந்த்பூா், பனஸ்வாடி, ஒசூா், தருமபுரி, சேலம், நாமக்கல், கரூா், திருச்சி, புதுக்கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம் வழியாக ராமேஸ்வரத்துக்கு சென்று வருகிறது. இந்த வாராந்திர ரயிலானது வரும் ஏப்ரல் தொடங்கி ஜூன் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஹூப்ளி - ராமேஸ்வரம் விரைவு ரயிலானது (எண் 07355), கா்நாடக மாநிலம், ஹூப்ளியில், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஜூன் 24ம் தேதி வரை சனிக்கிழமை தோறும் காலை 6.30 மணிக்குப் புறப்பட்டு சேலத்தில் இரவு 7.50 மணி, நாமக்கல்லில் இரவு 8.44 மணி, கரூரில் இரவு 9.58 மணிக்கு வந்து ராமேஸ்வரத்தை ஞாயிறு காலை 6.15 மணிக்கு சென்றடையும். பாம்பன் பாலத்தில் போக்குவரத்து தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளதால், ஹூப்ளி - ராமேஸ்வரம் ரயிலானது ஹூப்ளி - ராமநாதபுரம் வரை மட்டும் இயக்கப்படும்.

இதையும் படிங்க : நெல்லை - மேட்டுப்பாளையம் ரயில் இனி கிணத்துக்கடவு ரயில் நிலையத்தில் நின்று செல்லும்!

மறுமாா்க்கத்தில் ராமேஸ்வரம் - ஹூப்ளி வாராந்திர விரைவு ரயிலானது (எண் 07356) ஏப். 2ம் தேதி முதல் ஜூன் 25ம் தேதி வரை, வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு ராமேஸ்வரத்தில் இருந்து புறப்பட்டு கரூரில் அதிகாலை 3.48 மணி, நாமக்கல்லில் காலை 4.19 மணி, சேலத்தில் காலை 5.45 மணிக்கு வந்து ஹூப்ளிக்கு திங்கள்கிழமை இரவு 7.25 மணிக்கு சென்றடையும்” என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Namakkal, Southern railway