ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு - ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை!

நாமக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு - ஆராய்ச்சி நிலையம் எச்சரிக்கை!

நாமக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

நாமக்கல் மாவட்டத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Namakkal District News : நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் நாளை மறுநாள்( திங்கள் கிழமை) கனமழை பெய்யும் என்று நாமக்கல் மாவட்ட கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆயராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நாமக்கல் மாவட்ட கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ‘இன்று 30 மி.மீட்டரும் நாளை( ஞாயிற்றுக்கிழமை) 20மி.மீட்டர் மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. திங்கள் கிழமையும் கனமழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. மேலும், 16ம் தேதி செவ்வாய் கிழமை மழை பெய்யாது. இன்று முதல் 5 நாட்களுக்கு மணிக்கு 6 கி.மீட்டர் வேகத்தில் காற்று வீசும்.

இன்று தென் மேற்கு திசையில் இருந்தும், நாளை வடக்கு திசையில் இருந்தும், நாளை மறுநாள் முதல் 3 நாட்களுக்கு வடகிழக்கு திசையில் இருந்தும் காற்று வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 87.8 டிகிரியாகவும், குறைந்த பட்சமாக 68 டிகிரியாகவும் இருக்கும்.

இதையும் படிங்க : புதையலுக்கு ஆசைப்பட்டு நகை, ரொக்கத்தை இழந்த ஜவுளி அதிபர்... ஸ்கெட்ச் போட்டு தூக்கிய சாமியார்

காற்றின் ஈரப்பதம் அதிக பட்சமாக முறையே 90, 85, 80, 80, 80 சதவீதமாகவும், குறைந்த பட்சமாக முறையே 80, 70, 65, 65, 55 சதவீதமாகவும் இருக்கும்.  சிறப்பு வானிலையை பொறுத்த வரை அடுத்த 5 நாட்களுக்கு வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Karthi K
First published:

Tags: Local News, Namakkal