முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு!

நாமக்கல் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நீர், மோர் பந்தல் திறப்பு!

நீர்மோர் பந்தல்

நீர்மோர் பந்தல்

Namakkal : கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் நீர் மோர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது.

  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மார்க்கெட் அருகே காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் நீர், மோர் பந்தல் திறக்கப்பட்டுள்ளது.

நாமக்கல் நகர தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் திருச்செங்கோடு ரோடு, தினசரி மார்க்கெட் வளாக நுழைவு வாயில் அருகில் கோடை காலத்தில் பொதுமக்களுக்கு தாகம் தீர்க்கும் வகையில் நீர், மோர் பந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மார்க்கெட் சங்க தலைவர் மனோகரன் தலைமை தாங்கினார். பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கும் பணியை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் தொடங்கி வைத்தார்.

top videos

    நிகழ்ச்சியில் பேரமைப்பின் மாவட்ட செயலாளர் பொன்.வீரக்குமார், பொருளாளர் சீனிவாசன், இளைஞர் அணி அமைப்பாளர்கள் ராயல் பத்மநாபன், மரக்கடை அருண்குமார் மற்றும் தினசரி மார்க்கெட் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    First published:

    Tags: Local News, Namakkal