Home /namakkal /

நாமக்கல் நகராட்சியில் சொத்துவரி சமர்ப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு!

நாமக்கல் நகராட்சியில் சொத்துவரி சமர்ப்பிக்க விண்ணப்பங்கள் வரவேற்பு!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

NAMAKKAL : நாமக்கல் நகராட்சி பகுதிகளில் சொத்துவரி சீராய்வுப் பணிகள் முடிவுற்றுள்ளன. தற்போது புதிய சொத்துவரி விதிப்புகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது என்று நாமக்கல் நகராட்சி ஆணையாளா் சுதா தெரிவித்துள்ளார். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
நாமக்கல் நகராட்சி பகுதிகளில் சொத்துவரி சீராய்வுப் பணிகள் முடிவுற்றுள்ளன. தற்போது புதிய சொத்துவரி விதிப்புகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது என்று நாமக்கல் நகராட்சி ஆணையாளா் சுதா தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டுகளில் ஏற்பட்ட விலைவாசி உயர்வு, பணியாளர்களின் ஊதிய உயர்வு, பொதுமக்களுக்கு செய்யவேண்டிய அடிப்படை தேவை மற்றும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் ஏற்படுத்தப்பட்டுள்ள அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தி பராமரிப்பு செய்தல் போன்றவற்றிற்கு தேவைப்படும் கூடுதல் செலவீனம் ஆகியவற்றை கருத்தில் கொண்டும், அடித்தட்டு மக்களின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டும் சொத்து வரி சீராய்வு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மேலும், தமிழக அரசு செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:- "மத்திய அரசால் அமைக்கப்பட்ட 15-வது நிதி ஆணையமானது, தமது அறிக்கையில் 2022-2023 ஆம் ஆண்டு முதல், உள்ளாட்சி அமைப்புகள், ஆணையத்தின் பரிந்துரையின் அடிப்படையில், மானியம் பெறுவதற்கான தகுதியை பெறும் பொருட்டு, 2021 - 2022 ஆம் ஆண்டில், சொத்துவரி தள வீதங்களை (Floor rates) அறிவிக்கை செய்ய வேண்டும் எனவும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சிக்கு ஏற்றவாறு ஆண்டுதோறும் சொத்துவரி வீதத்தை உயர்த்திட வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதித்துள்ளது.

இதை வாசிக்க... நாமக்கலில் பாரம்பரிய நெல் விதைகள் 50% மானியத்தில் விற்பனை- கிடைக்கும் இடங்கள் இதோ.!

இந்நிலையில், நாமக்கல் நகராட்சி ஆணையாளா் சுதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் நகராட்சி பகுதிகளில் சொத்துவரி சீராய்வுப் பணிகள் முடிவுற்றுள்ளன. தற்போது புதிய சொத்துவரி விதிப்புகள் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

நாமக்கல் நகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் புதிதாக சொத்து வரி விதிக்கவேண்டிய இனங்களுக்கான விண்ணப்பங்களை நகராட்சியில் அலுவலக வேலை நாட்களில் பெற்று உரிய ஆவணங்களுடன் சமா்ப்பித்து புதிதாக வரி விதிப்பு செய்து கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Published by:Lakshmanan G
First published:

Tags: Local News, Namakkal

அடுத்த செய்தி