Home /namakkal /

நாமக்கலில் விநாயகர் சிலைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

நாமக்கலில் விநாயகர் சிலைகள் அமைக்கும் பணிகள் தீவிரம்

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்காகன முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India
    நாமக்கல் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாடுவதற்காகன முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றது.

    நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா வருகிற 31-ம் தேதி வெகு விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதற்காக குடியிருப்பு பகுதிகள், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பூஜைகள் நடைபெற்று ஊர்வலமாகக் கொண்டு சென்று நீர்நிலைகளில் கரைக்கப்படும்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக விநாயகர் சிலைகளை ஊர்வலமாகக் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் வீடுகளிலே விநாயகர் சிலைகளை வைத்து விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடினார்கள்.

    தற்போது கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட நிலையில், விநாயகர் சதுர்த்தி விழாவை வெகு விமரிசையாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இதற்காக நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகளை தயாரிக்கும் பணிகள் மற்றும் சிலைகளுக்கு வண்ணம் பூசும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    மேலும் அரசு விதிமுறைகளைப் பின்பற்றி எளிதில் தண்ணீரில் கரையக்கூடிய வகையில் சிலைகள் தயாரிக்கப்படுகின்றன. வண்ண பவுடர்களை அழகிய முறையில் ஸ்பிரே மூலமாகவும், பிரஷ் மூலமாகவும் சிலைகளுக்கு அடித்து வருகின்றனர்.

    ஒவ்வொரு விநாயகர் சிலைகளும் அரையடி உயரம் முதல், பத்து அடி உயரம் வரை உள்ள சிலைகள் செய்யப்படுகின்றன. இதில் வித்தியாசமான விநாயகர் கொண்டு வரும் வகையில் சிங்கம், யானை, மயில், கருடன், மூஞ்சூறு போன்ற பல்வேறு வாகனங்களில் விநாயகர் அமர்ந்துள்ளது போல் தயாரிக்கப்படுகிறது. மேலும் பத்து அடிக்கு மேல் விநாயகர் சிலை வைக்க கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    சுற்றுச்சூழல் பாதிப்படையாத வகையில் சிலைகள் ஒவ்வொன்றும் 30 ரூபாயில் இருந்து உயரத்திற்கு ஏற்றவாறு, 5,000 ரூபாய் வரை தயாரிக்கப்பட்டுள்ளன. மேலும் நாமக்கல் மாவட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ள இடங்களில் மட்டும் சிலைகள் வைத்து வழிபட வேண்டும் மற்றும் நீர்நிலைகளில் கரைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    செய்தியாளர்: மதன் -நாமக்கல்
    Published by:Karthick S
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி