முகப்பு /நாமக்கல் /

50 சதவீத மானிய விலையில் பவர் டில்லர் - நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிப்பு

50 சதவீத மானிய விலையில் பவர் டில்லர் - நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு முக்கிய அறிப்பு

பவர் டில்லர்

பவர் டில்லர்

Namakkal District | நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரங்கள் வழங்குவது தொடர்பாக மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்ட விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது. இது குறித்து, நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் செய்திக்குறிப் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழ்நாடு அரசு, வேளாண்மைப் பொறியியல் துறை மூலம், அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்திட்டம், 2021-2022ன் கீழ் அண்ணா மறுமலர்ச்சி திட்ட கிராமங்களில், விவசாயிகளுக்கு மானிய விலையில் பவர் டில்லர் இயந்திரங்கள் வழங்கப்பட உள்ளது.

பவர் டில்லர் இயந்திரம் வாங்கும் சிறு, குறு விவசாயிகள் மகளிர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின விவசாயிகளுக்கு 50 சதவீத மானியமும், இதர விவசாயிகளுக்கு 40 சதவிகிதம் மானியமும் வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ. 85,000 பின்னேற்பு மானியமாக வழங்கப்பட உள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த திட்டத்தின் கீழ், பயன்பெற விரும்பும் நாமக்கல் பகுதி விவசாயிகள், நாமக்கல் திருச்சி ரோட்டில், வசந்தபுரத்தில் உள்ள வேளண்மைப் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு, உரிய ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்கலாம்.

Must Read : காஞ்சி நகரில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - ரசித்து சுற்றிப்பார்க்க ஒருநாள் போதாது!

இதேபோல, திருச்செங்கோடு பகுதி விவசாயிகள், திருச்செங்கோட்டில் சேலம் மெயின் ரோட்டில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகத்திற்கு ஆவணங்களுடன் சென்று விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Agriculture, Local News, Namakkal