நாமக்கல் மாவட்டத்தில் உள்ள துணை மின்நிலையங்களில் மாதம் தோறும் பராமரிப்பு பணி காரணமாக மின்நிறுத்தம் செய்யப்படும். அந்த வகையில் நாளை (ஜன:20) பல்வேறு பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்பட உள்ளது. அந்தவகையில், நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஜன.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக மின் பகிர்மான வட்ட செயற்பொறியாளர் சீ.நாகராஜன் தெரிவித்துள்ளார்.
மின்தடை ஏற்படும் பகுதிகள் :
எருமப்பட்டி, வரகூர், அலங்காநத்தம், பொட்டிரெட்டிப்பட்டி, தோட்டமுடையான்பட்டி, நவலடிப்பட்டி, பவித்திரம், தேவராயபுரம், வரதராஜபுரம், முட்டாஞ்செட்டி, சிங்களகோம்பை, காவக்காரப்பட்டி, பவித்திரம்புதூா், செல்லிபாளையம், கஸ்தூரிப்பட்டி.
அதேபோல், பரமத்தி வேலூர் வட்டம், சோழசிராமணி துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஜன.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.
மின் தடை ஏற்படும் பகுதிகள் :
சோழசிராமணி, சுள்ளிபாளையம், சத்திபாளையம், சின்னாம்பாளையம், ஜமீன்இளம்பள்ளி, சித்தம்பூண்டி, மாரப்பம்பாளையம், இ.நல்லாகவுண்டம்பாளையம், பி.ஜி.விலசு. ஜேடா்பாளையம் துணை மின் நிலையத்திற்கு உள்பட்ட பகுதியில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை (ஜன.20) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் செய்யப்படுகிறது.
உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க
மின் நிறுத்தம் செய்யப்படும் பகுதிகள்: ஜேடா்பாளையம், வடகரையாத்தூா், காளிபாளையம், கரப்பாளையம், கண்டிபாளையம், வடுகபாளையம், சிறுநல்லிக்கோயில், கள்ளுக்கடைமேடு, கொத்தமங்கலம், அரசம்பாளையம், நஞ்சப்பகவுண்டம்பாளையம், நாய்க்கனூா், குரும்பலமகாதேவி, எலந்தக்குட்டை, கருக்கம்பாளையம்.
எனவே மேற்கண்ட பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மாதாந்திர நிறுத்தம் செய்யப்பட உள்ளதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறும் மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Local News, Namakkal, Power Shutdown