Home /namakkal /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஜூலை 21) பல்வேறு பகுதிகளில் மின்தடை -  விவரங்கள் இதோ!

நாமக்கல் மாவட்டத்தில் நாளை (ஜூலை 21) பல்வேறு பகுதிகளில் மின்தடை -  விவரங்கள் இதோ!

நாமக்கல் பவர் கட் (July 21)

நாமக்கல் பவர் கட் (July 21)

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், திருச்செங்கோடு, நாமக்கல், எலச்சியபாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை மின் தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும் ...
    நாமக்கல் மாவட்டத்தின் ராசிபுரம், திருச்செங்கோடு, நாமக்கல், எலச்சியபாளையம் என பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (ஜூலை 21 - வியாழன்) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

    அதன்படி, ராசிபுரம் தாலுகா, மெட்டாலா துணை மின்நிலையத்தில் நாளை (ஜூலை 21 - வியாழன்) பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ள காரணத்தால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மெட்டாலா, கணவாய்பட்டி, கப்பலூத்து, ராஜாபாளையம், உடையார்பாளையம், கார்கூடல்பட்டி உரம்பு, ஆயில்பட்டி, காட்டூர், காமராஜ் நகர், மலையாளப்பட்டி, முள்ளுக்குறிச்சி, பெரிய கோம்பை, பெரப்பஞ்சோலை, பெரியகுறிச்சி, மூலக்குறிச்சி, ஊனாந்தாங்கல், கரியாம்பட்டி, வரகூர் கோம்பை போன்ற சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்பட உள்ளது.

    இதேபோல், திருச்செங்கோடு கோட்டத்திற்குட்பட்ட பருத்திப்பள்ளி துணை மின்நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், வையப்பமலை, கருங்கல்பட்டி, மொரங்கம், நாகர்பாளையம், மின்னாம்பள்ளி, குப்பிச்சிபாளையம், சின்னமணலி, நல்லாம்பாளையம், கட்டிப்பாளையம் சோமனம்பட்டி, பருத்திபள்ளி, ராமாபுரம், அவினாசிபட்டி, பிள்ளாநத்தம், சீத்தக்காடு, மோர்பாளையம், வட்டூர், செம்மங்குட்டை, காங்கேயம் பாளையம், கொன்னையார், எலச்சிபாளையம் உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நாமக்கல் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாமக்கல், நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி கொசவம்பட்டி, ரெட்டிப் பட்டி, தூசூர், முதலைப் பட்டி போதுப்பட்டி, என் ஜி.ஓ. காலனி, வீசாணம். சின்ன முதலைப்பட்டி பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அதேபோல், திருச்செங்கோடு கோட்டத் திற்குட்பட்ட முசிறி துணை மின்நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் அக்கலாம்பட்டி, குப்பகவுண்டன்புதூர், குன்னங்கல் புதூர், கொட்டாம்பட்டி. நாய்கடிபுதூர், சிலுவம்பட்டி, அத்தியம்பாளையம், பொரசாபாளையம், மாரப்பநாயக்கன்பட்டி, முசிறி. பள்ளிப்பட்டி, இளையாபுரம், புத்தூர், வேப்பமரத்து புதூர், மணிகட்டிபுதூர், கணக்கம்பாளையம், சிங்கிலிபட்டி, பொம்மம்பட்டி, தளிகை, நருவலூர், தொட்டி பாளையம், பாலக்காடு, சின்ன தளிகை, தட்டாரபாளையம், குப்பநாயக்கனூர் ஆகிய சுற்று வட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Arun
    First published:

    Tags: Local News, Namakkal

    அடுத்த செய்தி