ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் மாவட்ட மக்களே.. நாளை இங்கெல்லாம் மின் தடை செய்யப்படும்

நாமக்கல் மாவட்ட மக்களே.. நாளை இங்கெல்லாம் மின் தடை செய்யப்படும்

மின் தடை

மின் தடை

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன் கிழமை) மின் தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டம், நாமக்கல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (25-01-2023) இந்த பகுதியில் மின் வினியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அதன்படி, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் நாகராஜன் தெரிவித்துள்ளார்.

Must Read : திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்கள் - பார்த்து என்ஜாய் பண்ணுங்க!

மின் தடை பகுதிகள்:

நாமக்கல் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் நல்லிபாளையம், நாமக்கல் நகரம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், வகுரம்பட்டி, கொண்டிசெட்டிப்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, காவேட்டிப்பட்டி, கொசவம்பட்டி, செல்வகணபதி நகர், தொட்டிப்பட்டி, மணியாரம் புதூர் மற்றும் குறிஞ்சிநகர் ஆகிய பகுதிகளில் மின் வினியோம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Namakkal, Power cut, Power Shutdown