ஹோம் /நாமக்கல் /

நாமக்கல் மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின்தடை செய்யப்படும் தெரியுமா?

நாமக்கல் மாவட்டத்தில் நாளை எங்கெல்லாம் மின்தடை செய்யப்படும் தெரியுமா?

மின் தடை அறிவிப்பு

மின் தடை அறிவிப்பு

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (புதன்கிழமை) மின்தடை செய்யப்பட இருப்பதாகவும், அது குறித்த விவரங்களையும் மின் வாரிய அதிகார்கள் வெளியிட்டுள்ளனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டதில் உள்ள பல்வேறு துணை மின் நிலையங்களில் நாளை (புதன்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன. எனவே நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள் பற்றிய விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, நல்லிபாளையம், அய்யம்பாளையம், உத்தமபாளையம், கொண்டிசெட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூர், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என்.ஜி.ஓ.காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின்வினியோகம் நிறுத்தப்பட இருப்பதாக நாமக்கல் மின்வாரிய செயற்பொறியாளர் (பொறுப்பு) ஆனந்தபாபு தெரிவித்துள்ளார்.

இதேபோல, ராசிபுரம் துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால், ராசிபுரம், முத்துக்காளிப்பட்டி, மசக்காளிப்பட்டி, புதுப்பாளையம், பட்டணம், முனியப்பம்பாளையம், வடுகம், கவுண்டம்பாளையம், முருங்கப்பட்டி, போடிநாயக்கன்பட்டி, சிங்களாந்தபுரம், மோளப்பாளையம், அரசபாளையம், வேலம்பாளையம், வெள்ளாளப்பட்டி, பட்டணம், கூனவேலம்பட்டி புதூர், குருசாமிபாளையம், கதிராநல்லூர், நத்தமேடு, கண்ணூர்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்பட உள்ளது என ராசிபுரம் மின்வாரிய செயற்பொறியாளர் சபாநாயகம் தெரிவித்துள்ளார்.

Must Read : அழகு... அற்புதம் - கன்னியாகுமரியில் பார்த்து ரசிக்க வேண்டிய சுற்றுலா தலங்களின் லிஸ்ட்!

இந்நிலையில், எஸ்.வாழவந்தி துணை மின் நிலையத்திலும் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே, மோகனூர், மோகனூர் சர்க்கரை ஆலை பகுதி, குட்லாம்பாறை, கீழ் சாத்தம்பூர், எஸ்.வாழவந்தி, மணப்பள்ளி, பாலப்பட்டி, எம்.ராசாம்பாளையம், காளிபாளையம், ஆரியூர், நன்செய் இடையாறு, ஓலப்பாளையம், புதுப்பாளையம், ராசாம்பாளையம், செங்கப்பள்ளி ஆகிய இடங்களில் மின்சாரம் நிறுத்தப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

அத்துடன், பெரியகரசப்பாளையம், சின்னகரசபாளையம், நொச்சிப்பட்டி, பெரமாண்டம்பாளையம், குன்னிபாளையம், எல்லை காட்டுபுதூர், தீர்த்தாம்பாளையம், பேட்டைபாளையம், தோப்பூர், மணியங்காளிப்பட்டி, நெய்க்காரன்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக பரமத்திவேலூர் மின்வாரிய செயற்பொறியாளர் ராணி தெரிவித்துள்ளார்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Namakkal, Power cut, Power Shutdown