ஹோம் /நாமக்கல் /

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

நாமக்கலில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் தெரியுமா?

மின் தடை

மின் தடை

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல் மாவட்டத்தில் மாத்தனூர் பகுதிகளில் செவ்வாய் கிழமை (நவம்பர் 22) மின் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் அறிவித்துள்ளது.

நாமக்கல் ஆனங்கூர், சமயசங்கிலி, திருச்செங்கோடு, மல்லசமுத்திரம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. ஆகையால் இந்த பகுதியில் நாளை மின் தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி மின்வாரியம் சார்பில் மின் கம்பங்கள், மின் மாற்றிகளில் உள்ள பழுது மற்றும் செடி கொடிகளை அகற்றும் பணி நடக்க இருக்கிறது. மேலும் இதை சரிசெய்து பின்னர் சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.

இதனால் பொது மக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் உங்கள் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு உரிய ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, கீழ் கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி மின் தடை ஏற்படுகிறது. இந்த தகவலை மின் வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆனங்கூர்:

தோக்கவாடி, வரப்பாளையம், கே.எஸ்.ஆர். கல்வி நகர், தச்சங்காட்டு பாளையம், காடச்சநல்லூர், குப்புச்சிபாளையம், வேலாத்தா கோவில், டி.ஜி.பாளையம், பள்ளி கவுண்டம்பாளையம், ஆனங்கூர், பழையபாளையம், புளியம்பட்டியம் பாளையம், ஆண்டிகாடு.

சமயசங்கிலி பகுதிகளில் மின் தடை பகுதிகள்:

சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாய்க்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்.ஜி.ஆர். நகர், சில்லாங்காடு, ஆவத்திப்பாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், ஒட்டமெத்தை மற்றும் ஈரோடு மாவட்டம் பிராமண பெரிய அக்ரஹாரம், சத்தி ரோடு அக்ரஹாரம், பவானி மெயின் ரோடு, காமராஜ் நகர், சுண்ணாம்பு ஓடை, நெறிக்கல்மேடு, தாசில்தார் தோட்டம், 16 ரோடு, அதியமான் நகர், செங்கோட்டையன் நகர், வைரம்பாளையம், வாட்டர் ஆபீஸ் ரோடு.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

திருச்செங்கோடு :

கருவேப்பம்பட்டி, ஆத்தூராம்பாளையம், நாராயணம்பாளையம், அம்மாபாளையம், சீனிவாசம்பாளையம், தேவனாங்குறிச்சி, கீழேரிப்பட்டி, சிறுமொளசி, அணிமூர், ஆண்டிபாளையம், தோக்ககவாடி, வரகூராம்பட்டி, செங்கோடம்பாளையம் முதல் சிந்தம்பாளையம் வரை, கைலாசம்பாளையம் முதல் திருமங்கலம்.

Must Read : தேனி மாவட்டத்தில் உருவாகும் புதிய அருவிகள்... சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...

மல்லசமுத்திரம் :

மல்லசமுத்திரம், மாமரப்பட்டி, வடுகபாளையம், கோட்டபாளையம், கரியகவுண்டம்பாளையம், பாலமேடு, அக்கரைப்பட்டி, செம்பாம் பாளையம், கூத்தாநத்தம், காளிப்பட்டி, மங்களம், கரட்டு வளவு, சின்ன காளிப்பட்டி, செண்பகமகாதேவி, கொளந்தானூர், கண்டர்குலமாணிக்கம், மாமுண்டி, சப்பையாபுரம், நாச்சிபட்டி, கட்டிபாளையம்.

Published by:Suresh V
First published:

Tags: Local News, Namakkal, Power cut, Power Shutdown