ஹோம் /Namakkal /

நாமக்கல்லில் நாளை (ஜூன் 8) எந்தெந்த பகுதிகளில் மின்தடை..? விவரங்கள் இதோ!

நாமக்கல்லில் நாளை (ஜூன் 8) எந்தெந்த பகுதிகளில் மின்தடை..? விவரங்கள் இதோ!

நாமக்கல்லில் நாளை மின் தடை

நாமக்கல்லில் நாளை மின் தடை

Namakkal District: நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நாளை (ஜூன் 8 - புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. மின் கம்பங்களில் மின் கசிவு, மின் இணைப்பு துண்டிப்பு ஏதாவது ஏற்படுகிறதா என்று சரிபார்க்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் நாமக்கல் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

  இந்த நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நாளை (ஜூன் 8 - புதன்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.

  சமயசங்கிலி துணை மின்நிலையம்:

  அதன்படி நாளை 08.06.2022 புதன்கிழமை காலை 9 மணிமுதல் மதியம் 2 மணிவரை சமயசங்கிலி துணை மின்நிலையம் பகுதியில் உள்ள சமயசங்கிலி, சீராம்பாளையம், செங்குட்டைபாளையம், குப்பாண்டபாளையம், குள்ளநாயக்கன்பாளையம், களியனூர், கோட்டைமேடு, எம்ஜி.ஆர்நகர், சில்லிங்காடு, ஆவத்திபாளையம், பள்ளிபாளையம் அக்ரஹாரம், பவானி மெயின்ரோடு ஆகிய பகுதிகளில் மின்சாரம் விநியோகம் நிறுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  வெப்படை துணை மின்நிலையம்:

  இதேபோல் வெப்படை துணை மின்நிலையம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதிகளான வெப்படை, பாதனர இந்திராநகர், ரங்கனூர் நால்ரோடு, புதுப்பாளையம், எலந்தகுட்டை, தாண்டாங்காடு, காந்திநகர், சின்னார்பா ஊளயம், இ.காட்டூர், புதுமண்டபத்தூர், தெற்குபாளையம், மாதேஸ்வரன் கோயில், வெடியரசம்பாளையம், செம்பாற்காடு, சின்னாக்கவுண்டம்பாளையம், களியனூர், மாம்பாளையம், மோளகவுண்டம்பாளையம்,

  எளையாம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மின்சார வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது.

  Published by:Arun
  First published:

  Tags: Namakkal, Power cut