முகப்பு /நாமக்கல் /

நாமக்கல் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் - விவரங்கள் அறிவிப்பு

நாமக்கல் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் - விவரங்கள் அறிவிப்பு

மின்தொடர்பு கழகம்

மின்தொடர்பு கழகம்

Namakkal District | நாமக்கல் மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் பற்றிய விவரத்தை நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் அறிவித்துள்ளார்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில் மாதந்தோறும் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, பிப்ரவரி மாதத்திற்கான நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த நாமக்கல் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சிவகுமார் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், தமிழ்நாடு மின்சார வாரியத்தின் சார்பில், மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் ஒவ்வொரு மாதமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்தக் கூட்டத்தில் சம்மந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மின் நுகர்வோர், மின் இணைப்பு சம்பந்தமான தங்களின் புகார்களை நேரிடையாக தெரிவித்து தீர்வு பெறலாம்.

அதன்படி, பிப்ரவரி  8ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு ப.வேலூர் செயற்பொறியாளர் அலுவலகத்தில் குறைதீர் கூட்டம் நடைபெறும்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

வரும் 15ஆம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணிக்கு திருச்செங்கோடு செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 17ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிக்கு பள்ளிபாளையம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும், 22ஆம் தேதி புதன்கிழமை காலை 11 மணிக்கு ராசிபுரம் செயற்பொறியாளர் அலுவலகத்திலும் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டங்கள் நடைபெற இருக்கின்றன.

Must Read : கோவை ஜங்ஷன் ரயில் நிலையத்திற்கு 150 வயது... இந்த ரயில் நிலையத்திற்கு இத்தனை சிறப்புகளா!

சம்மந்தப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள், மின் இணைப்பு சம்மந்தமான தங்களின் கோரிக்கை மனுக்களை நேரடியாக அளித்து தீர்வு பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: Local News, Namakkal, TNEB