முகப்பு /நாமக்கல் /

நாமக்கல்லில்  கோழிப்பண்ணையாளர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

நாமக்கல்லில்  கோழிப்பண்ணையாளர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம்

நாமக்கலில் 2வது நாளாக போராட்டம்

நாமக்கலில் 2வது நாளாக போராட்டம்

Namakkal Poultry farmers Protest | முட்டை விலையை 3 அல்லது 5 முறை மட்டுமே மாற்றம் செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Namakkal, India

நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் கோழிப்பண்ணையாளர்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

நாமக்கல்லில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோழிப்பண்னைகள் உள்ளன இவற்றில் நாள்தோறும் 4.50 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அவ்வாறு உற்பத்தி செய்யப்படும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கு வழங்குவதுடன் தமிழகம், கேரளா, புதுவை உள்ளிட்ட பகுதிகளுக்கு சில்லறை விற்பனை செய்யப்படுகிறது.

மீதமுள்ள முட்டைகள் வட மாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்த முட்டைகளுக்கு நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவானது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயம் செய்கிறது.

முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 40 காசுகளாக தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்துள்ளது. கடந்த 20 நாட்களில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை ஒரு ரூபாய் 25 காசுகள் வரை வீழ்ச்சி அடைந்துள்ளது.

இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழுவானது ஏற்கனவே முட்டை விலை 4 ரூபாய் 40 காசுகளாக விலை நிர்ணயம் செய்துள்ள நிலையில் பண்ணையாளர்களிடம் வியாபாரிகள் மேலும் 40 காசுகள் விலை குறைத்து 4 ரூபாய்க்கே முட்டைகளை விற்பனை செய்து வருகின்றனர்.

உங்கள் ஊர் செய்திகளை வீடியோவாக பெற கிளிக் செய்க

இந்த சூழலில் உற்பத்தி செலவை விட குறைவாக முட்டையை விற்பனை செய்வதால் பண்ணையாளர்களுக்கு தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வருவதாகவும் விலை நிர்ணயத்தில் உள்ள குளறுபடிகளை வலியுறுத்தி கோழி பண்ணையாளர்கள் இன்று நாமக்கல் பரமத்தி சாலையில் உள்ள தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு அலுவலகத்தில் உள்ளிருப்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

முட்டை உற்பத்தி செலவிற்கு ஏற்ற வகையில் குறைந்தபட்ச விலையை நிர்ணயம் செய்ய வேண்டும், ஒவ்வொரு மண்டலத்திற்கும் உற்பத்தி மற்றும் பருவ நிலைக்கு ஏற்றவாறு விலை வித்தியாசத்தை ஆண்டிற்கு 3 அல்லது 5 முறை மட்டுமே மாற்றம் செய்ய வேண்டும், வியாபாரிகளுக்கு குறைந்தபட்சம் 2 முதல் அதிகபட்சம் 5 பைசா வரை மட்டுமே மைனஸ் பரிந்துரைக்க வேண்டும், முட்டை கோழி பண்ணையாளர்களையும், நுகர்வோரையும் ஏமாற்றும் வகையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு மைனஸ் விலையை நடைமுறைப் படுத்துவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட கோழி பண்ணையாளர்கள் இரண்டாவது நாளாக உள்ளிருப்பு போராட்டத்தில் வருகின்றனர்.

First published:

Tags: Local News, Namakkal